பரிதி இளம்வழுதி ஜாமீனில் விடுதலை
சென்னை:
எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தேர்தலின்போது அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனுடைய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகபரிதி இளம்வழுதி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரிதிஇளம்வழுதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
இந்த நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிதி சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், ஜான் பாண்டியன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்குறித்து விசாரித்தார்.
பின்னர், பரிதி உள்பட 9 பேர் மீதும் எந்த வழக்குகளும் நிலுவயிைல் இல்லை. எனவே இவர்களை ஜாமீனில்விடுதலை செய்கிறேன். பரிதி சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினசரி மாலை 14-வது செஷன்ஸ் கோர்ட்டில்கையெழுத்திட வேண்டும். மற்றவர்கள் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும்.
வாகனங்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக 9 பேரும் தலா ரூ. 3000 அபராதம் கட்ட வேண்டும் என்று கூறினார்நீதிபதி அசோக் குமார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!