For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் மீது தடையை நீடிக்க ஜே.வி.பி. வலியுறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகள் தங்களது கோரிக்கையான தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாகஅறிவிக்கும் வரை, அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாது என தீவிரவாத சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெருமூனாஅறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஜனதா விமுக்தி பெருமூனாவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான விமல் வீரவன்சா இலங்கைபத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி:

தமிழ் ஈழ விடுதலை முன்னணி (டெலோ) இலங்கையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.

ஆனால் விடுதலைப்புலிகள் தங்களது தனி ஈழம் கோரிக்கையைக் கைவிடும்வரை அவர்கள் மீதான தடையை நீக்கக் கூடாதுஎன்ற கொள்கையில் ஜனதா விமுக்தி பெருமூனா உறுதியாக இருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி, சந்திரிகா அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது டெலோஅமைப்பும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதரவு கையெழுத்திட்டது.

முன்னதாக, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஆளும்கட்சியான மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதையடுத்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசு மெஜாரிட்டியை இழந்தது.

ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக டெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள்கையெழுத்துப் போடுவதற்கு முன்பு, ஐக்கிய தேசிய கட்சியிடம் பல கோரிக்கைகளை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கைகளில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் இந்தகோரிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ளநம்பிக்கையில்லாத் தீர்மானம் அதன் மீது நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் தோல்வியடையும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மக்கள் கூட்டணி அரசை இடறி விழச் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கனவுகள் ஒருநாளும் நனவாகாது.

இலங்கையில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு சந்திரிகா தலைமையிலான ஆட்சியே நடக்கும் என்றார்.

அதே போல் அதிபர் சந்திரிகா அளித்த பேட்டி ஒன்றில், மக்கள் கூட்டணியில் இருந்த சிறிய கட்சி தனது ஆதரவை வாபஸ்பெற்றுள்ளதால் மக்கள் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார். இலங்கையில் மக்கள் கூட்டணி கடந்த1994 ம் ஆண்டு முதல் ஆட்சி நடத்தி வருகிறது.

இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் ஜூலை 3 வது வாரத்தில் நடைபெற உள்ளது என்பதுநினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X