For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஷாரப் வருகை: எல்லையில் ராணுவம் உஷார்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபரும் ராணுவ ஆட்சியாளருமானபர்வேஸ் முஷாரபும் சந்திக்க இருப்பதையொட்டி பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்க காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உலகத்திலேயே மிகவும் ஆபத்தான இடம் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனால் வர்ணிக்கப்பட்ட இடம் காஷ்மீர் பகுதியிலள்ளஇந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியாகும்.

பல வெளியுறவு பிரச்சனைகளைப் பற்றியும், முக்கியமாக காஷ்மீர் எல்லைப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக, வருகிற14ம் தேதி சனிக்கிழமையன்று இந்தியா வருகிறார் முஷாரப்.

பிரதமர் வாஜ்பாயும் முஷாரபும் ஆக்ராவில் சந்தித்துப் பேசுகிறார்கள். இந்தப்பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மதவாதிகளின் மற்றும் ராணுவத்தின் ஆதரவு பெற்றதீவிரவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திலும் கூட இந்தப்பேச்சுவார்த்தைக்கு முழு அளவில் ஆதரவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த சக்திகளால் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காகவும், தலைவர்களின் பாதுகாப்புக் கருதியும் எல்லையில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டள்ளது.

வடக்கு மண்டல எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,முக்கியமான இந்தகட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டமுன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இது என்றார்.

702 கி.மீ நீளமுள்ள இந்திய-பாகிஸ்தானிய எல்லையில் ராணுவத்தினர்கண்ணிமைக்காமல் பாதுகப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோந்துப் படைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் சிறு புல் அசைந்தாலும் கூடஅத்திசை நோக்கி பாய்கிறார்கள்.

ஒவ்வொறு வீரரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் யாறும் ஊடுறுவி விடாமல்பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொறு வீரருக்கும் இடப்பட்டுள்ளகட்டளையாகும்.

1997ம் ஆண்டு அப்போதைய பாரதப்பிரதமர் குஜ்ராலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீபும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போது தான் 2வது முறையாகஅதிபபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யு.என்.ஐ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X