46 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது இந்தியா
கொழும்பு:
கொழும்புவில் நடைபெற்று வரும் கோகோ-கோலா கோப்பை கிரிக்கெட் போட்டியில்இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இதன் மூலம் நியூஸிலாந்தும், இந்தியாவும் சம நிலையை அடைந்துள்ளன.
நாளை நியுசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்றால்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டிஇந்தியாவிற்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
டாசில் வெற்றி பெற்ற இலங்கை, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.
இதை அடுத்து இந்திய வீரர்கள் களம் இறங்கினர். துவக்க ஆட்டக்காரர்களாக அணியின்கேப்டன் கங்குலியும், ஷேவாக்கும் களம் இறங்கினர்.
இந்திய அணியின் துவக்கம் சரியாக இல்லை. முதல் பந்திலேயே சமிந்தா வாஸ் வீசியபந்தில் ஷேவாக் எல்.பி.டபிள்யூ ஆனார். இதை அடுத்து வி.வி.எஸ். லட்சுமணன் களம்இறங்கினார்.
கங்குலி முட்டை எடுத்து அவுட் ஆனார். வாஸ் வீசிய பந்தில் ஜெயசூர்யாவிடம் காட்ச்கொடுத்து அவுட் ஆனார் கங்கூலி. அப்போது அணியின் ஸ்கோர் 7.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் திராவிட், மற்றொரு நம்பிக்கைநட்சத்திரமான லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவிற்கு அதிகஸ்கோரை சேர்க்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது பொய்த்து விட்டது.
அணியின் ஸ்கோர் 31ஆக இருந்த போது லட்சுமணன் ஜெயசூர்யாவிடம் காட்ச் கொடுத்துஅவுட் ஆனார். பந்து வீசியவர் பெர்னாண்டோ. லட்சுமணன் 10 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார் ஹேமங் பதானி. இந்த ஜோடியும் நிலைத்துநிற்கவில்லை. ஸ்கோர் 38 ஆக இருந்த போது பதானியும் ஆட்டமிழந்தார். அவர் எடுத்தரன் 2 மட்டுமே.
இந்தியாவின் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டே இருந்தன. அடுத்து ராகுல்திராவிட்டுடன் இணைந்து ஆட வந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடிதான் வெற்றி தேடித்தரும்வகையில் விளையாடியது.
இந்த ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை 38ல் இருந்து 140 ஆக உயர்த்தியது. இந்நிலையில் ராகுல் திராவிட் அவுட் ஆனார். அவர் 47 ரன்கள் எடுத்திருந்தார்.கலுவித்தரனாவினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் திராவிட். பந்து வீசியவர்ஜெயசூர்யா.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த யுவராஜ் சிங்குடன் ஆட வந்தார் சோதி. இவர் 30ரன்கள் எடுத்திருந்த போது முரளிதரன் வீசிய பந்தில் போல்ட் ஆனார். அப்போதுஅணியின் ஸ்கோர் 197.
இதற்கு அடுத்து ஆட வந்தவர் சமீர் தீகே. இவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார்.இவரை அடுத்துவந்த ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் மிகச் சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருந்தார். இவர் சதமடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தது.
இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 227ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் வாஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள்எடுத்தார். முரளிதரன் 2 விக்கெட் எடுத்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!