For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமர்சனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்: அனைவருக்கும் ராமதாஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பா.ம.க. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்திருப்பதைச் சந்தர்ப்பவாதம் என்று விமர்சிக்க யாருக்கும்அருகதை இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் முன்னுக்குப் பின் மாறுபட்ட கூட்டணிகளை அமைத்து அதில் ஓரளவு லாபமும்அடைந்து வரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.

இதில் தனித்துப் போட்டியிடுவது, பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது அதற்கடுத்து திமுகவுடன் கூட்டணிகாண்பது.

இப்படிப் பலகோணங்களிலும் தேர்தல்களைச் சந்தித்து வரும் கட்சிகளில் பா.ம.க. ஒரு முன்னோடி. சமீபத்தில்பா.ம.க. ஏற்படுத்திய அரசியல் திருப்பத்தை அனைவரும் அறிவோம்.

அதாவது, 4 மாதங்களுக்கு முன்பு வரை தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்து 2 அமைச்சர் பதவிகளையும் தன்கையில் வைத்திருந்தது.

பிறகு இங்கிருந்தால் கருணாநிதி எங்கள் கோவனத்தை உருவிவிடுவார், அன்புச்சகோதரி ஜெயலலிதாவே சிறந்தகூட்டணியின் தலைவி. அவர் எங்களைக் கைவிடமாட்டார் என்றார் ராமதாஸ்.

எனவே அந்த 2 அமைச்சர் பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க.கூட்டணி வைத்தது.

தேர்தல் முடிந்த 2 மாதங்களில் அதிமுக கூட்டணியில் தர்மம் நிலைநாட்டப்படவில்லை. ஜெயலலிதா எங்களுக்குதுரோகம் இழைத்துவிட்டார் என்று சொல்லிவிட்டு அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ்.

இப்போது பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தே.ஜ.கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

ஆனால் பா.ஜ.க.வினர் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் பா.ம.க.வை முறைப்படி இன்னும் கூட்டணியில்சேர்க்கவில்லை என்று சொல்வது வேறு கதை.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பா.ம.க. வின் கூட்டணித் தத்துவத்தை விமர்சித்து வருகின்றன.

அதை எதிர்த்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் 4 பக்க நீளமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

ஆரம்பத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி உருவாகக் காரணமாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அதன்பிறகுதமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஏற்பட்ட அரசியல் நிலவரங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறும்நிலைமையை ஏற்படுத்தியது.

நமது தேர்தல் ஜனநாயகத்தில் அணி மாறுவது என்பது புதிதான ஒன்றல்ல. 1967-லிருந்தே ஒவ்வொரு தேர்தலிலும்தேர்தலுக்கு முன்பிருந்த அணிகள் தேர்தலுக்குப்பின் நீடித்ததாக வரலாறு இல்லை.

தேர்தலின்போது கைகோர்த்து நின்ற கட்சிகள் தேர்தலுக்குப்பின் பிரிந்திருக்கின்றன. 1967-ல் அண்ணாவைஆதரித்த ராஜாஜி, 1971-ல் திமுகவை எதிர்க்க காமராஜரை ஆதரித்தார். இப்படிப் பல உதாரணங்களைக்கூறமுடியும்.

மேலும் சட்டசபைத் தேர்தலின்போது ஏற்பட்டுள்ள கூட்டணி அந்தத் தேர்தல் முடிந்தவுடனே முடிந்துவிடும் என்றுஜெயலலிதாவே 2 முறை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பா.ம.க மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணைந்திருப்பதில் எந்த சந்தர்ப்பவாதமூம அரசியல்உள்நோக்கமும் இல்லை. மேலும் எங்களைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை. அதை உணர்ந்துகொண்டு இனியாவது விமர்சனத்தை நிறுத்துக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு ராம்தாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X