ஐ.பி.எஸ். விவகாரம்: ஜெ.க்கு ராஜஸ்தான் முதல்வர் ஆதரவு
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி மாற்ற விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை ஆதரித்து ராஜஸ்தான்முதல்வர் அசோக் கெலாட் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு என்று கூறி,ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப முடியாது என்று ஜெயலலிதா என்று மத்திய அரசுக்குக்கடிதம் ஒன்றையும் வியாழக்கிழமை அனுப்பியும் விட்டார்.
மத்திய அரசின் அழைப்பு சம்பந்தமாக, சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதா மற்ற மாநில முதல்வர்களுக்கும்கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்காக, மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களுடைய கண்டனங்களைப் பிரதமருக்குத் தெரிவிக்கவேண்டும் என்றும், இந்த விஷயத்தில் தான் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை அனைத்து முதல்வர்களும் ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கான முதல் பதில் ராஜஸ்தானிடமிருந்து வியாழக்கிழமை வெளிவந்துள்ளது. பிரதமருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், ஜெயலலிதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ராஜஸ்தான் முதல்வர் கெலாட்.
இது தொடர்பாக பிரதமருக்கு கெலாட் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சி எதிர்கட்சியாக இருந்தபோது, மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்து கூறிய கருத்துஇப்போது ஆளும் கட்சியாக இருக்கும் போது மாறி உள்ளது. மாநில அரசுக்கு நிர்வாக விஷயத்தில் முழு சுதந்திரம்கொடுக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறிய பா.ஜ.க., இப்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
மாநில அரசுதான் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.1954ம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய போலீஸ் சர்விசஸ் சட்டம் 6ன் படி ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநில அரசின்கட்டுப்பாட்டின் கீழ் தான் வருகிறார்கள்.
மாநில அரசு தகுதியான அதிகாரிகள் பட்டியலை தயாரித்து அவர்களில் யாரை மத்திய அரசு பணிக்கு அனுப்புவதுஎன்று முடிவு செய்யும். அதன் பின் அந்த பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்படும்.
இந்த பட்டியலை பெற்ற பின்பு மத்திய அரசு எல்லா அமைச்சகரத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பும். எந்தஅமைச்சரவைக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேவையோ.தேவைக்கு ஏற்றபடி ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுபணிக்கு தேவை என மாநில அரசுக்கு மத்திய கடிதம் அனுப்பும்.
அதன் பின் மாநில அரசு ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்கும். இதுதான்பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. இதில் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால்தான் மத்திய அரசின் ஆணைசெல்லுபடியாகும்.
கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமானால் அது மாநில அரசு மற்றும்சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிப்பை ஏற்படுத்தும். பல ஆண்டுகாலமாக பாதுகாக்கப்பட்டு வரும் சட்டத்தின்புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டங்களையும், சட்ட விதிகளையும் முறையாகப் பின்பற்றினால்தான் அதிகாரிகளுக்கும் அரசுகளுக்கும் இடையேநல்ல நட்புறவு வளரும்.
நிலைமை இப்படி இருக்கும்போது, தமிழகத்தில் பணி புரியும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசு பணிக்குஅனுப்புமாறு கோரி உள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.
மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவு எந்த விதத்திலும் ஏற்க முடியாதது. இந்த விஷயத்தில் உடனடியாகநீங்கள் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை என்றால் மத்திய-மாநில அரசு உறவில் பாதிப்புஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார் கெலாட்.
அசோக் கெலாட்டின் கடிதத்தின் நகல் ஜெயலலிதாவுக்கும் அனுப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ்கட்சிதான் ஆட்சியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!