ஊனமுற்ற பெண்ணுக்கு இண்டியா இன்போ வாசகர்கள் உதவி
பெங்களூர்:
ஊனமுற்ற பெண்ணின் போராட்டத்தை இண்டியா இன்போ தளத்தின் மூலம் படித்தஅதன் வாசகர்கள் அந்த பெண்ணுக்கு வாரி வழங்கி உதவ முன் வந்துள்ளனர்.
சபிதா மோனிஸ் இரண்டு கைகளையும் இழந்தவர். ஆனால் இவர் மனம் தளரவில்லை.வாழ்வை சவாலாக ஏற்றுக் கொண்டார். தனது இரண்டு கால்களாலும் எழுத பழகிக்கொண்டார்.
இவர் தனது பள்ளி இறுதி தேர்விலும் (எஸ்.எஸ்.எல்.சி) தேர்விலும் தனது பள்ளியில்முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
இவர் சமீபததில் பெங்களூருக்கு வந்திருந்தார். தனக்கு கர்நாடக அரசு உதவ வேண்டும்என்று கர்நாடக அரசை கேட்டு கர்நாடக தலைமைச் செயலகத்தின் (விதான சவுதா)முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அவரது போராட்டமும், படமும் இண்டியா இன்போவின் ஆங்கிலத் தளத்தில் பிக்சர்ஆஃப் த டே: யுனிக் புரோட்டஸ்ட் (Picture of the day: Unique Protest) என்றதலைப்பில் வெளியிட்டப்பட்டது.
இந்த செய்தி இணையத்தளத்தில் வெளியான உடனேயே ஏராளமான வாசகர்களும்சபிதா மோனிசுக்கு உதவ முன் வந்துள்ளனர்.
சபிதா மோனிசுக்கு உதவ விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் அவரை தொடர்புகொள்ளலாம்:
Father Basil Monis, Garadadi House,Garadadi Village, Baddyar, BelthangadiTaluk, Dakshina District. She can alsobe contacted through Dakshina KannadaDistrict Physically Handicapped Association Vice-President Melville Pinto at:Janadhwani, Mangalore 575002.
Phone numbers: (0824 ) 438761 (residence), 425490&423047 (office). Fax:(0824)
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!