• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிர் தின்னும் மோசடி காப்பகங்கள்

By Staff
|

ஏர்வாடி தர்காவைச் சுற்றி நூற்றுக்கணக்கான மன நலக் காப்பகங்கள் உள்ளன. பெரும்பாலானவை மோசடியானகாப்பகங்கள். இதில் பல காப்பகங்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகின்றன.

எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வெறும் ஓலைக் குடிசைகளையும் ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்டகொட்டடிகளைத் தான் மன நலக் காப்பகங்கள் என்கிறார்கள்.

இங்கு மன நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் தரப்படுவதில்லை. டாக்டர் எல்லாம் கிடையாது.வெறும் மந்திரிப்பு தான் சிகிச்சை.

வெறும் கஞ்சி தான் உணவு.

இந்த காப்பகங்களுக்கு அரசு அங்கீகாரம் எல்லாம் கிடையாது. இங்கு சேர்க்கப்படுபவர்கள் குறித்து எந்தவிதமானஎழுத்துப்பூர்வமான ஆதரங்கள் கிடையாது. இப்போது தீயில் வெந்து உயிர் நீத்துள்ள இந்த மன நலம் குன்றியமனிதர்களின் குடும்பங்களுக்கு காப்பகத்தைச் சேர்ந்த யாரும் பதில் சொல்லப் போவதில்லை.

இந்தக் காப்பகங்களில் எந்த மன நல சிகிச்சையும் கொடுகப்படுவதில்லை. காலை, மாலை இரு வேளையும்இங்குள்ள புனிதத் தலத்தில் கொண்டு போய் உட்கார வைத்து திரும்ப அழைத்து வந்துவிடுகிறார்கள். இது தான்சிகிச்சை.

மீதி நேரம் முழுவதும் கைகளில், கால்களில் சங்கிலியைக் கட்டி ஆடு, மாடுகளை அடைப்பது போல இந்தகாப்பகங்களில் கட்டி வைக்கிறார்கள்.

தரையில் விரிப்புகள் கூட இல்லாத இந்த காப்பகங்களில் சேர்க்கப்படும் மன நோயாளிக்கு வரும் முதல் நோய்தோல் நோய் தான். 24 மணி நேரமும் மண்ணில் உட்கார வைக்கப்படுவதால் உடல் முழுவதும் புண்கள், காயங்கள்என இந்த நோயாளிகள் படும்பாட்டை சொல்லி மாளாது.

இந்த புண்களுக்கும் மருந்து போடப்படுவதில்லை. சங்கிலிகளால் தேய்க்கப்பட்டு கை மணிக்கட்டுகளிலும், குதிகால்களிலும் ரத்தக் களறியுடன் தான் இந்த மன நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாதி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள சூழ்நிலையால் முழு பைத்தியங்கள் ஆவதும் உண்டு. மனநலத்தோடு உடல் நலமும் பாதிக்கப்பட்டு இந்த அப்பாவி மனிதர்கள் படும்பாடு கண்ணீக் வரவழைத்து விடுகிறது.

பல்வேறு குடும்பத்தினர், குறிப்பாக படிப்பறிவில்லாத குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள மன நலம்பாதிக்கப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள்.

இவர்களைப் பார்த்துக் கொள்ள மாதம் 500 முதல் 5,000 வரை வசூலிக்கின்றன இந்த காப்பகங்கள்.

ஒருவரை போய் விட்டுவிட்டு வந்தால், அடுத்த 6 மாதம் கழித்து நாம் அங்கே சென்றால், நாம் விட்டுவிட்டு வந்தநபர் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய் இருப்பார். உரிய உணவும், சிகிச்சையும் கிடைக்காமல்இந்த ஜீவன்கள் உடல் முழுவதும் புண்களுடன் கிட்டத்தட்ட தெருவில் வீசப்பட்ட கந்தல் துணி போலமாறிவிட்டிருக்கும்.

திமுக ஆட்சியில் இருந்த போது இந்த காப்பகங்களை எதிர்த்து மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம்பேராசிரியை போராட்டம் நடத்தினார். இதையடுத்து இந்த மன நோயாளிகள் அனைவரையும் அரசு மன நலமருத்துவமனைகளுக்கு மாற்றப் போவதாய் அரசியல்வாதிகளும், நலத்துறை அதிகாரிகளும் வாய் கிழியபேசினார்கள். ஆனால், அரசியல்வாதிகளில் மன நிலை நமக்குத் தெரிந்தது தானே!. சொன்னது ஏதும்நடக்கவில்லை.

தெரு நாய்க்கு காலில் முள் குத்தினால் கூட அதை எதிர்த்து குரல் கொடுக்க மிருகவதைத் தடுப்பு அமைப்புகள்வந்துவிட்டன.

ஆனால், இந்தக் கொடுமையான மனித உரிமை மீறல்களை மனித உரிமை அமைப்புகளும், அரசும்கண்டுகொள்ளமல் விட்டிருப்பது மிகுந்த வருத்ததத்துக்குறியது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X