For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன நல காப்பகங்களை மூட அரசுக்கு அமைச்சர் பரிந்துரை

By Staff
Google Oneindia Tamil News

ஏர்வாடி:

ஏர்வாடி தர்காவைச் சுற்றியுள்ள அனைத்து மனநலக் காப்பகங்களையும் உடனடியாக மூடிவிட தமிழக அரசுக்குராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.


எந்தவிதமான அரசு அங்கீகாரமும் இல்லாத இந்த மோசடி காப்பகங்களில் எந்த மன நோயாளிக்கும் மருத்துவசிகிச்சை ஏதும் அளிக்கப்படுவதில்லை. காப்பகங்கள் என்ற பெயரில் மன நோயாளிகளை சங்கிலிகளால்கட்டிப்போட்டு, அவர்களை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

நேற்று அதிகாலை மொய்தீன் பாதுஷா காப்பகம் என்ற மன நல மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மனநோயாளிகள் எரிந்து சாம்பலாகிவிட்டனர்.

இதில் யாருடைய உடல்களையும் அடையாளம் கூட காண முடியவில்லை. அந்த அளவுக்கு வெறும் கரிக்கட்டைகளாகத் தான் அந்த உடல்கள் கிடந்தன. இறநந்தவர்கள் அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு பெண் தனது உடலில் தீ பிடித்தது கூடத் தெரியாமல் சிரித்துக் கொண்டேவெளியே வந்துள்ளார். பின்னர் அப்படியே எரிந்து போயுள்ளார். அந்த அளவுக்கு மனநிலைபாதிக்க்பபட்டவர்கள்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு வன்முறை ஏதும் பரவி விடாமல் தடுக்க போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல காவல்துறை ஐ.டி. பாலச்சந்திரன் தலைமையில் பெரும் படை அங்கு முகாமிட்டுள்ளது.

இன்று இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்வர் ராஜா தலைமையில் அவசரக் கூட்டம் நடந்தது. இதில்ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஜய்குமார், ஐ.ஜி. பாலச்சந்திரன், டி.ஐ.ஜி. சஞ்சீவ் குமார், இங்குள்ள தர்காவின்நிர்வாகக் குழு மற்றும் உ.யர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவுகளை மாநில அரசுக்கும்பரிந்துரைத்துள்ளன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:

ஏர்வாடியில் உள்ள அனைத்து மன நல மையங்களையும் உடனடியாக மூட வேண்டும். மன நோயாளிகளை இங்குகொண்டு வந்த சேர்த்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிமேல் தர்காவில் மன நோயாளிகளை கொண்டு வந்த மதரீதியிலான சிகிச்சை தர விரும்பினால், அவர்களைஅவர்களின் குடும்பத்தார் தான் உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த மையங்களில் விட்டுவிட்டுஓடக் கூடாது.

இவர்களைத் தங்க வைக்க வீட்டார் தான் வீடுகளை பார்த்துக் கொள்ள வேண்டும். காப்பகங்களில் தங்க வைக்கக்கூடாது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடனடியாக மன நல நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும். அதே போலதீக்காய சிகிச்சைப் பிரிவு ஒன்றையும் அரசு மருத்துவனையில் திறக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அமைச்சர் தலைமையிலானகுழு பரிந்துரைத்துள்ளது.

மன நலக் காப்பகங்களை மூடிவிட தர்காவின் நிர்வாகக் கமிட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அமைச்சர் அன்வர் ராஜா நேற்று முதல் ஏர்வாடியிலேயே முகாமிட்டு இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல்தடுக்க அனைத்துத் தரப்பினரின் யோசனைகளையும் கேட்டு வருகிறார்.

கோரத்தைக் கண்டு மனமொடிந்து பேசிய அன்வர் ராஜா, இந்த மோசடி காப்பகங்கள் அனைத்தையும் மூடச்செய்வது தான் தனது முதல் வேலை என்றார்.

இறப்பது கூட தெரியாமல்...

எரிந்து சாம்பலான இந்த மனநோயாளிகளின் உடல்களை அடையாளம் கூட காண்பதற்குள் உறவினர்களும்அதிகாரிகளும் மிகவும் சிரமப்பட்டுவிட்டனர். அந்த அளவுக்கு வெறும் கரிக் கட்டைகளாகத் தான் அந்த உடல்கள்கிடந்தன.

இறந்தவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு பெண் தனது உடலில் தீ பிடித்தது கூடத் தெரியாமல் சிரித்துக் கொண்டேவெளியே வந்துள்ளார். பின்னர் அப்படியே எரிந்து போயுள்ளார். அந்த அளவுக்கு மனநிலைபாதிக்கப்பட்டவர்கள்.

இறந்தவர்களின் உடல்கள் ஒரு வழியாய் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவரவர் மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் இன்று நடத்தப்பட்டன.

4 முஸ்லீம்களின் உடல்களை தர்கா கமிட்டியே புதைத்து இறுதிச் சடங்கு நடத்தியது. இந்துக்களின் உடல்களுக்குஅவரவர் வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

இந்த உடல்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.

கருணாநிதி அதிர்ச்சி:

26 மன நோயாளிகள் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகக் கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இந்நிலையில் இந்த காப்பகங்கள் நடத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், எதிர் காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X