For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயந்தி நடராஜனைக் குறி வைக்கும் காங்கிரஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பியுமான ஜெயந்தி நடராஜனை காங்கிரஸ்கட்சிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.


காங்கிரஸ் கட்சி அதிகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்து 1996ம் ஆண்டு மூப்பனார் தலைமையில் பெரும்கோஷ்டியினர் காங்கிரஸ் கட்சியை உடைத்து வெளியேறினர். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியையும் ஆரம்பித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், காமராஜர் பவன் உள்ளிட்ட காங்கிரஸ் சொத்துக்கள் அனைத்தையும்கத்தியில்லா யுத்தம் மூலம் கைப்பற்றினர்.

அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு வைத்து தேர்தலை சந்தித்து அமோக வெற்றியைப் பெற்றனர்.அதன் பின் காட்சிகள் மாறின. எந்த கட்சியை எதிர்த்து புதுக் கட்சி கண்டார்களோ அதை மறந்து விட்டு மீண்டும் அதிமுகவுடன்கூட்டணி கண்டார்கள்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் 26 இடங்களில் வெற்றியும் பெற்றார்கள்.

இந் நிலையில் சமீபத்தில் நடந்த ராஜ்யசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அந்தஇடத்தைப் பெறுவதற்கு கடும் அடிதடி நடந்தது. கடைசியில் அந்த இடம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகனுக்குக்கிடைத்தது.

இதனால் கடுமையான ஏமாற்றத்திற்கு ஆளானவர் ஜெயந்தி நடராஜன். இந்த முறையும் தனக்கே எம்.பி. சீட் கிடைக்கும் என்றுபெரிதும் நம்பிய அவர் பெரும் சோகத்தில் மூழ்கினார்.

ஜெயந்தி நடராஜன் சமீப காலமாகவே தலைமையுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். சட்டசபைத் தேர்தலில்பெண்கள் யாருக்குமே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சீட் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் கருத்துக் கூறுகையில்,த.மா.காவில் ஆணாதிக்க மனப்பான்மை பெருகி விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதனால் கட்சித் தலைவர் மூப்பனார் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து ஜெயந்தி நடராஜன் அனைத்து விவகாரத்திலும் ஓரம் கட்டப்பட்டார். எப்போதும் மூப்பனார்அருகிலேயே காணப்படும் அவர் அந்த இடத்தை இழந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,தனுஷ்கோடி ஆதித்தன் போன்றோரே எதற்கெடுத்தாலும் முன் நின்றார்கள். இதனால் ஜெயந்தி நடராஜன் வருத்தத்தில் ஆழ்ந்தார்.

கட்சி தன்னைப் புறக்கணிக்கப்பதாக அவர் நினைப்பதாக தமாகா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந் நிலையில், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பிரிந்து போன மூப்பனாரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க காங்கிரஸ்மேலிடம் மாநிலத் தலைவர் இளங்கோவனைக் கேட்டுக் கொண்டது.

இதற்காக மூப்பனாரை பலமுறை இளங்கோவன் சந்தித்து கோரிக்கை விடுத்தும் மூப்பனார் கண்டு கொள்ளவில்லை. பொறுத்துப்பார்த்த கட்சி மேலிடம் இதற்கு மேலும் மூப்பனாரை கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத்தெரிகிறது.

மூப்பனார் போனால் போகட்டும், பிரிந்து போன பிற தலைவர்களை ஒன்றாக சேருங்கள் என்ற உத்தரவு இளங்கோவனுக்குபிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதையடுத்தே வாழப்பாடி ராமமூர்த்தியை கட்சியில் சேர்க்க இளங்கோவன் முயற்சித்தார்.ஆனால் மூப்பனார் தலையீட்டால் அதுவும் தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெயந்தி நடராஜனை கட்சிக்குள் இழுக்க இளங்கோவன் காய் நகர்த்தி வருகிறாராம். ஜெயந்தி நடராஜனுடன்இதுதொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், விரைவில் அவர் அணி மாறுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுஅடிபடுகிறது.

ஜெயந்தியைத் தவிர ப.சிதம்பரத்தையும் கட்சிக்குள் இழுக்க முடியுமா என்பது குறித்தும் இளங்கோவன் தரப்பினர் ஆலோசனைசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அவ்வளவு எளிதில் நடைபெறாது என்ற அவ நம்பிக்கையும் அவர்களிடத்தில்உள்ளதாம்.

இருப்பினும் தூண்டில் போட்டுப் பார்ப்போம் வந்தால் வரட்டும் என்ற முடிவில் அவர்கள் உள்ளார்களாம்.

இதேபோல, பா.ம.க. வரவால் திமுக அணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு விலகினால் அவர்களையும் காங்கிரஸ்கூட்டணிக்கு இழுக்கவும் ஐடியா உள்ளதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X