For Daily Alerts
மூப்பனாருக்காக பிரார்த்தியுங்கள்... தமாகவினருக்குக் கோரிக்கை
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மதக் கூட்டங்களுக்கு ஏற்பாடுசெய்து மூப்பனார் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமாகா தொண்டர்கள் பிரார்த்திக்கவேண்டும் என்று அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
தமாகா தலைவர் மூப்பனார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவரது பிறந்த நாள் 19ம் தேதியன்று வருகிறது.
இதையொட்டி தமாகா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தலைவர் மூப்பனார் உடல் நலம் குன்றியுள்ளார். எனவே அவரது பிறந்த நாளன்று, அனைத்து மதக் கூட்டங்களுக்குதமாகாவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூப்பனார் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும். அதேபோல 20ம் தேதி ராஜீவ் காந்திபிறந்த நாளை தமாகாவினர் கோலாகலமாக, உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும் என்று அந்த அறிக்கையில்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!