For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எரிகிற வீட்டில்...

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஏர்வாடி தீ விபத்தில் இறந்த மனநலம் குன்றிய ஒரு பெண்ணுக்கு தாங்கள்தான் தாய் என்று கூறிக் கொண்டு 3பெண்கள் உதவித்தொகை கேட்டு வருகின்றனர்.

திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் நடந்த தீ விபத்தில்மனநலம் குன்றிய 27 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தத் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 50,000 உதவித் தொகை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உதவித்தொகையை பெறுவதற்காக பலரும் ஆள்மாறாட்டம் செய்து இறந்தவர்களின் உறவினர்கள் தாங்கள்தான் என்று கூறி ஏமாற்றி பணத்தை பறித்துச் செல்ல முயன்று வருகின்றனர்.

இதுவரை இறந்து போனவர்களின் உறவினர்கள் என்று கூறி 2 பேர் மட்டும் உதவித் தொகை பெற்றுச் சென்றுஉள்ளனர். ஆனால் அவர்களும் இறந்து போனவர் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

தீ விபத்தில் இறந்து போன சென்னையைச் சேர்ந்த ரசியா (வயது 17) என்ற பெண்ணுக்கு தாங்கள்தான் தாய் என்றுசொந்தம் கொண்டாடி தங்களுக்கு உதவித் தொகை வரவேண்டும் என்று 3 பெண்கள் கோரிக்கை விடுத்ததால்வருவாய்த்துறை அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

இந்த 3 பேரும் வருவாய்த்துறை அதிகாரி தமிசுதீனை சந்தித்து ரசியாவுக்கு தாங்கள்தான் தாய் என்று சொந்தம்கொண்டாடி உதவித் தொகையை தருமாறு கேட்டனர். அதிகாரிகள் அவர்களை மிரட்டி உண்மையைச்சொல்லுமாறு கேட்டபோதும், தாங்கள்தான் தாய் என்று அந்த 3 பேரும் உறுதியாக கூறி வந்தனர்.

ரசியாவின் தாய் என்பதற்கான ஆதாரத்தை கொண்டு வந்தால்தான் உதவித் தொகையை தர முடியும் என்றுஅதிகாரிகள் கண்டிப்பாக கூறியதை அடுத்து அங்கிருந்த 3 பெண்களில் 2 பேர் நழுவி விட்டனர். ஒருவர் மட்டும்அங்கேயே அழுது கொண்டே நின்று கொண்டிருந்தார். ஆனாலும், அவர்தான் ரசியாவின் உண்மையான தாயாஎன்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதே போல் வேறு சிலரும் தாங்கள்தான் இறந்து போனவர்களுக்கு அப்பா, மாமா என்று மனிதாபிமானம்இல்லாமல் பொய் சொல்லி உதவித்தொகையை அபகரிக்க முயன்று வருகிறார்கள். வேறுசிலர், மனநலம்பாதிக்கப்பட்டவர்களை தாங்கள் பார்த்துக் கொண்டதாகவும், தாங்கள்தான் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறிக் கொண்டு உதவித் தொகை பெற முயன்று வருகின்றனர்.

அவர்களிடம் அதிகாரிகள் ஆதாரம் கேட்டால் ரத்த சம்பந்தத்திற்கு உதவி செய்யததற்கு ஆதாரமா வைத்துக்கொள்ள முடியும் என்று பதில் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, அதிகாரிகள் இறந்து போனவர்களின் உறவினர் என்று கூறிக் கொண்டு உதவித் தொகை கேட்டுவருபவர்களிடம், அவர்கள்தான் இறந்து போனவர்களின் உண்மையான உறவினரா என்று முழுமையாக விசாரித்துதெரிந்து கொண்ட பின்னரே உதவித் தொகையை வழங்கி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X