For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவீனமயமாகிறது சென்னை கடலோர காவல் படை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய கடலோர காவல் படை நவீனப் படுத்தப்பட இருப்பதாக,கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் ராமேஸ்வர் சிங் கூறியுள்ளார்.


இதுகுறித்து, அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது:

20 வயதைத் தாண்டிய கப்பல்களை எல்லாம் "தலை முழுகி" விட்டு, 10 புதிய கப்பல்களை வாங்க கடலோர காவல்படை திட்டமிட்டுள்ளது.

கடலோர காவல் படையில் தற்போது 3 "ஹோவர்கிராப்ட்" கப்பல்கள் (ரோந்துக் கப்பல்கள்) உள்ளன. மேலும் 3கப்பல்கள் விரைவில் வரவிருக்கின்றன. அவற்றில் 2 கப்பல்கள், இலங்கை கடல் எல்லை அருகிலுள்ள மண்டபம்பகுதியில் ரோந்து சுற்றும்.

"இன்டர்செப்டர்" படகுகள் என்றழைக்கப்படும் மற்றொரு வகை விசைப் படகுகள், தற்போது சூரத்தில்தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 2 படகுகள், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னைக்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் அவை கடலோர காவல் படை பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படும்.

மேலும், பல நவீன வசதிகள் கொண்ட ஒரு படகு, கடலோர காவல் படைக்காக கோவாவில் தயாராகி வருகிறது.அடுத்த 2 ஆண்டுகளில் கடலோர காவல் பணியில் ஈடுபடத் துவங்கும்.

கடலோர காவல் படையில் தற்போது 17 "டோர்னியர்" வகை விமானங்கள் உள்ளன. இவை முக்கியமாக கடலோரபகுதியில் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, மேலும் 3 "டோர்னியா" வகைவிமானங்களை வாங்கவும் கடலோர காவல் படை முடிவு செய்துள்ளது.

கிழக்கு கடலோர பகுதியில், சென்னை தவிர, மேலும் 4 கடற்படை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.அவற்றில் ஒன்று பாண்டிச்சேரியிலும் மற்றொன்று நாகப்பட்டினத்திலும் நிறுவப்படும். மற்ற 2 மையங்கள்,ஆந்திராவின் காக்கிநாடாவிலும், ஒரிசாவின் கோபால்பூரிலும் செயல்பட உள்ளன என்றார் ராமேஸ்வர் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X