For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக பேரணியில் வன்முறை வெடித்தது: போலீஸ் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த திமுக பேரணி வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கி சூடுநடத்தினர். வன்முறையில் 5 திமுக தொண்டர்கள் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

கடந்த ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீசார் அராஜகத்துடன்நடந்து கொண்டதைக் கண்டித்து, பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி சென்னைசைதாப்பேட்டையில் நேற்று மாலை 3 மணிக்குத் தொடங்கியது.

சென்னை மேயரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் பேரணிக்குத் தலைமை தாங்கினார்.

4 மணி நேரம் அமைதியாக நடந்த பேரணி, கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே வந்தபோது,இரவு 7 மணிக்கு திடீரென்று தெரு விளக்குகள் உள்பட எல்லா விளக்குகளும் அணைந்தன.

இதனால் கலவரமடைந்த திமுக தொண்டர்கள் கல் வீச்சில் இறங்கினர். போலீசாரை நோக்கியும் ஏகப்பட்ட கற்கள்பாய்ந்தன. டி.ஜி.பி. அலுவலகம் மீதும் கல் வீசப்பட்டது.

போலீசார் மீது சரமாறியாக கல்வீச்சு நடந்ததையடுத்து திமுக தொண்டர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சிஅடித்தனர்.

பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே சண்டைமூண்டது. போலீசார் மீது தொடர்ந்து கற்களும் சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது. 2 போலீஸ் ஜீப்புகள், அரசு பஸ், மொபெட்ஆகியவை தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

கலவரத்தை அடக்குவதற்காக, போலீசார் தடியடிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தனர். அதன் பிறகும் கலவரம்நீடித்தது. இதனால் போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அப்படியிருந்தும் கலவரம் ஓயாததால், போலீசார்கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினார்கள்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கவே, வேறு வழியில்லாமல் கலவரக்காரர்களை நோக்கிபோலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதில் ஒருவர் அந்த இடத்திலேயே இறந்தார். போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து திமுகவினர்நாலாபக்கமும் சிதறி ஓடினர். இதில் பலர் மிதிபட்டு இறந்தனர். கூட்டம் கலைந்து ஓடிய பின்னர் கடற்கரை சாலையில்4 உடல்கள் மிதிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன.

வன்முறையில் இறந்துபோன 3 பேரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. இறந்தவர்களில் ஒருவரின் உடல்சென்னை அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் கொண்டு வரப்பட்டது. இன்னும் நான்கு பேரின உடல்கள்ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன.

இவர்கள் தவிர, இந்தக் கலவரத்தின் போது நடந்த கல்லெறி, தடியடி, துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களின்காரணமாக 15 போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

பேரணி பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்ற சில பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும்படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் பெயர் முருகேசன என்று தெரியவந்துள்ளது. இவர் சென்னைஈக்காடுதாங்கலைச் சேர்ந்தவர்.

மிதிபட்டு இறந்த 4 பேரில் ஒருவரின் பெயர் மட்டும் தெரியவந்துள்ளது. இவரது பெயர் அந்தோணி. இவர்திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X