For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்காப்புக்காகவே போலீசார் சுட்டனர்: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக பேரணியின்போது, வன்முறை ஏற்பட்டதையடுத்து, தற்காப்புக்காகத்தான் போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தினர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி தலைமையிலான திமுக பேரணி என்றாலே, அது வன்முறைப் பேரணியாகத்தான் முடியும் என்பதுவரலாறு கூறும் உண்மை. இதேபோலத்தான் இந்தப் பேரணியிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.திமுகவின் ரவுடித்தனம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி போலீசாருக்கு எதிராகத்தான் நடத்தப்பட இருக்கிறது என்று கருணாநிதி பேரணிக்கு முன்பாகவேதெளிவாகக் கூறியிருந்தார்.

டிஜிபி அலுவலகம் வரையிலும் அமைதியாகவே பேரணி நடந்துள்ளது. ஆனாலும், பேரணி ஆரம்பித்ததிலிருந்தே,திமுக தொண்டர்கள் போலீசாரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆங்காங்கே போலீசார் மீது திமுகதொண்டர்கள் கல்லெறித் தாக்குதல்களைக் கூட நடத்தினர்.

நேருக்கு நேராகவே அவர்கள் போலீசாரை நோக்கித் திட்டிய போதிலும், பொறுமைக்கு இலக்கணமாகவேபோலீசார் பொறுப்புடன் கடமையாற்றினர். அந்த நிலையிலும் அவர்கள் தங்கள் நிதானத்தை இழக்கவில்லை.

திமுக தொண்டர்கள் மது அருந்தியே வந்துள்ளனர். ஒரு சில சாவுகளையாவது நடத்திவிட வேண்டும் என்றஅறிவுரையுடன்தான் அவர்கள் வன்முறையைத் தூண்டியுள்ளனர்.

டிஜிபி அலுவலகத்திற்கு அருகில் பேரணி வந்தபோதுதான், வன்முறை வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள்கொளுத்தப்பட்டன. போலீசாரும் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து, டிஜிபி அலுவலகத்திற்குள்ளும் வன்முறையாளர்கள் புகுந்து, பயங்கரமான ஆயுதங்களால் தாக்கஆரம்பித்தனர். இதற்குப் பிறகுதான், வேறு வழியில்லாமல், தங்களைக் காத்துக் கொள்ளவும், அப்பாவிப்பொதுமக்களை வன்முறைகளில் இருந்து காப்பாற்றவும் போலீசார் முயன்றனர்.

போலீசாரும் இந்நாட்டுக் குடிமக்கள்தானே. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு அவர்களுக்குஉரிமையுண்டு. அதனால்தான், அவர்கள் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என்று ஆரம்பித்து, நிலைமைஎல்லையை மீற, துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர்.

102 போலீசார் காயம்:

இந்த வன்முறையில் 102 போலீசாரும் காயமடைந்துள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ரூ.25லட்சம் மதிப்புள்ள வாகனங்களும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை:

கருணாநிதி கைது சம்பவத்தின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள்கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்தப் பேரணியின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, யாரையும் கைது செய்யவில்லை.வழக்கம்போல அவ்வாறு கைது செய்திருந்தால், இந்த வன்முறையைத் தவிர்த்திருக்கலாம்.

தமிழகத்தில் ஆட்சி செய்யும் வாய்ப்பை மக்கள் தரவில்லை என்ற கோபத்தினால்தான் கருணாநிதி இந்தவன்முறைக்குத் திட்டமிட்டுள்ளார் என்பதை இந்த வன்முறைச் சம்பவங்களே தெளிவாகக் கூறுகின்றன என்று அந்தஅறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X