வெடிவிபத்து எப்படி? புதிய தகவல்கள்
வேலூர்:
வேலூரில் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர்கொல்லப்பட்டனர்.
இந்த தொழிற்சாலையில் பல யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டிலும் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களின் பணி பாதுகாப்புக்கான கருவிகளும் வழங்கபப்ட்டுள்ளது. அந்தந்த யூனிட்டுகளில் அதற்கெனநியமிக்கப்பட்ட தொழிலாளர்களே பணிபுரிந்து வந்தனர்.
இங்குள்ள 5 யூனிட்டுகளில் டெட்டனேட்டர் வெடிகள் தயார் செய்யப்படுகின்றன. அதன் பின் கடைசியாகடெட்டனேட்டர் வெடியில் பியூஸ்ஒயரை கிரிம்பிங் செய்வார்கள்.
"கிரிம்பிங்" செய்யும் பணி 302வது யூனிட்டில் நடைபெறும். இந்த பணியில் வியாழக்கிழமை காலை 24 பேர்ஈடுபட்டிருந்தனர். பியூஸ் ஒயரை டெட்டனேட்டருடன் இணைக்கும் போது திடீரென வெடிகள் வெடித்தன.
இதன் காரணமாகத்தான் அந்த யூனிட்டின் மேல் கூரை தரைமட்டமானது. கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன என்றுகூறினார் அண்ணாமலை.
இருந்தாலும், இந்த வெடிவிபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. 29 உடல்கள்மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!