For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நேற்று (சனிக்கிழமை) மாலை விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதிதாக 6 அமைச்சர்கள்சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிரூந்து விலகி, தற்போது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதிரிணமுல் காங்கிரஸ். பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றை சேர்ந்த எம்.பிக்களுக்கு அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த இரண்டு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம்கிடைக்கவிலலை.

இது குறித்து பிரதமர் கூறுகையில், "பா.ம.க. மற்றம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியனருக்கு உடனடியாக அமைச்சர்பதவி அளிக்கப்பட மாட்டாது. இந்த முறை பா.ஜ.க. எம்.பிக்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவிகொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி அளிப்பது குறித்து பரிந்துரை வரும்போது பரிசீலனை செய்யப்படும்" என்றார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. நாடாளுமன்றகூட்டத்தொடர் முடிந்தவுடன் பிரதமர் வாஜ்பாய் மத்திய அமைச்சரைவையை விரிவு படுத்துவார் என்றுகூறப்பட்டது.

பிரதமர் வாஜ்பாய் நேற்று (சனிக்கிழமை) ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை சந்தித்து மத்திய அமைச்சரவைவிரிவாக்கம் குறித்து எடுத்துக் கூறினார். புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அமைச்சர்கள் பெயர்களையும்ஜனாதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து, சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் புதியஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக பதவி வகித்த தனியார் மயமாக்கல் துறை அமைச்சர்அருண்ஷோரி மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ஷா நவாஸ் ஹுசேன் ஆகிய இருவருக்கும் காபினட் அமைச்சர்அந்தஸ்து வழங்கப்பட்டது.

புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களில் 2 பேர் காபினட் அமைச்சர்கள், 4 பேர் இணை அமைச்சர்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசி இனத்தலைவர் கரிய முன்டாவும், பாரதிய ஜனதா பொருளாளராகஇருந்துவரும் பிரகாஷ் கோயல் ஆகிய 2 பேரும் காபினட் அமைச்சர்கள் ஆகியுள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், அன்னாசாகேப் பாட்டீல் மற்றும் டெல்லி எம்.பியான விஜய் கோயல் ஆகிய 4 பேரும் இணை அமைச்சர்களாகியுள்ளனர்.

இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் பிரதான் டர்பனில் நபைெற்றுவரும் இன வெறிக்கு எதிரான சர்வதேச மாநாட்டி பங்கேற்க சென்றுள்ளதால் அவர் சனிக்கிழமை பதவியேற்கவில்லை.

புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, பிரதமர் கேட்டுக் கொண்டதன்படி, வேளாண்மைத் துறைஇணை அமைச்சர் தேவேந்திர பிரதான், வேளாண்மைத்துறையின் மற்றொரு இணை அமைச்சர் சோபா சிங், உணவுமற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீராம் சவுஹான், சுரங்கத்துறை இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ்கெய்க்வாட் ஆகிய 4 பேரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சுந்தர்லால் பட்வா உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியைராஜினாமா செய்வதாக முன்னரே பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். அமைச்சர்களின் ராஜினாமாவைஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்சியில் பிரதமர் வாஜ்பாய்,துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், உள்துறை அமைச்சர்அத்வானி மற்றும் பல கட்சித்தலைவர்களும் பங்கேற்றனர்.

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக எந்த நிகழச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தஜனாதிபதி, அதன் பிறகு பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X