கல்யாணத்திற்குப் பின் வேலை காலி... கேரள வாலிபர் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்யாணத்திற்காக கேரளாவுக்குச் சென்றவர் திருமணம் முடிந்தவுடன் சென்னைதிரும்பினார். ஆனால் அதற்குள் அவரது நிறுவனம் மூடப்பட்டு விட்டதால்அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் மதுசூதனன். இவர்அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில்இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக கேரளா சென்றிருந்தார்.

திருமணம் முடிந்தவுடன் மனைவியை ஊரில்விட்டு அவர் சென்னை திரும்பினார்.ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தை மூடி விட்டார்கள். இதனால்மதுசூதனன் அதிர்ச்சியடைந்தார்.

திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் வீடு திரும்பிய அவர் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற