காஷ்மீரிலும் பந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவுஅளிப்பதை எதிர்த்தும் 4 தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் பந்த் நடத்தின. இதற்கு ஓரளவு ஆதரவும் இருந்தது.

காஷ்மீரில் இயங்கி வரும் ஜெய்ஸ்-இ-முகம்மத், ஹர்கால் உல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகள் உட்பட4 தீவிரவாத இயக்கங்கள் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இருப்பினும் அங்கு செயல்படும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு அமைப்பினர், இந்த பந்துக்குஆதரவு தெரிவிக்கவில்லை.

தீவிரவாதிகள் நடத்திய இந்த பந்த்தினால், காஷ்மீரில் கடைகள், கல்லூரிகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும்சாலைகளில் வாகனப்போக்குவரத்து மிகக்குறைவாகவே இருந்தது.

பாகிஸ்தானிலும் மதவாதக் கட்சிகள் மற்றும் மதவாத இயக்கங்கள் இன்று பந்த் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற