மீண்டும் நான் முதல்வராவேன் - ஜெ. சூளுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

"நான் கோர்ட்டில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், நான்குற்றமற்றவள் என்றும் விரைவில் நிரூபிப்பேன். பிறகு இடைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகி,மீண்டும் முதல்வராகப் பதவியேற்பேன்" என்று கூறினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து ஜெயலலிதாதனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்களக்கு அவர் விடுத்துள்ளசெய்தியில் கூறியிருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான். ஒட்டுமொத்த அதிமுகவும் அல்ல. அதிமுக ஆட்சிதொடர்ந்து நடக்கத்தான் போகிறது.

நான் கோர்ட்டில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், நான் குற்றமற்றவள்என்றும் விரைவில் நிரூபிப்பேன்.

பிறகு இடைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகி, மீண்டும் முதல்வராகப் பதவியேற்பேன். அதற்கானகாலம் வெகுதொலைவில் இல்லை.

எனவே அதிமுக தொண்டர்களும், என்மீது அன்பு கொண்டுள்ள தாய்மார்களும அமைதிகாக்க வேண்டும்.தீர்ப்பைக் கண்டு யாரும் சினம்கொண்டு வன்முறையில் இறங்கவேண்டாம்.

ஏனென்றால் அதிமுக ஆட்சியைக் கலைக்க காரணம்தேடி கழுகுபோல் காத்திருக்கிறார் கருணாநிதி. அதற்கு அதிமுகதொண்டர்கள் வாய்ப்பளிக்கக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற