பணிகளைத் துவக்கினார் பன்னீர் செல்வம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை முதல்வர் பொறுப்பை கவனிக்கத்தொடங்கினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து பதவியிலிருந்துஅகற்றப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம்தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளுநர் சி.ரங்கராஜன் பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இதையடுத்து சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வந்தார்முதல்வர் பன்னீர் செல்வம். அவரை மூத்த அமைச்சர்களான பொன்னையன்,தம்பித்துரை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அழைத்து வந்து முதல்வர் இருக்கையில்அமர வைத்தனர்.

அதன் பிறகு பத்திரப்பதிவுத் துறையில் 1500 ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிஅளிப்பதற்கான கோப்பில் கையெழுத்துப் போட்டு அவர் தனது பணிகளைத்தொடங்கினார்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் அலுவலகத்தில் இருந்து தனது பணிகளைக் கவனித்தார்பன்னீர் செல்வம். அதன் பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். ஜெயலலிதாதலைமையிலான அ.தி.மு.க அரசு கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும்நிறைவேற்றப்படும்.

காவிரிப்பிரச்சினையில் தேவைக்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்எடுக்கப்படும். சோதனைகளைக் கடந்து மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப்பதவியேற்பார் என்றார் அவர்.

முன்னதாக ஜெயலலிதா வீட்டுக்குச் சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் அவரிடம் ஆசிபெற்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற