தேர்தல் பணிக்குழுக்களை அறிவித்தது புதிய நீதிக் கட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய நீதிக் கட்சி தனது தேர்தல் பணிக்குழுக்களை அறிவித்துள்ளது. ஆனால் இந்தக் கட்சி எங்கு போட்டியிடப்போகிறது, யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது முளைத்த ஜாதிக் கட்சிதான் புதிய நீதிக் கட்சி. கடந்த சட்டசபைத்தேர்தலின்போது தங்களுக்கு மிகப் பெரிய ஜாதி பின்னணி இருப்பதாக இந்தக் கட்சி கூறி வந்தது.

ஆனால் அதிமுக இந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டது. கடைசி கட்டமாக திமுக கூட்டணியில்சேர பிரயத்தனம் செய்தது. கடைசியில் அவர்கள் கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இணைந்தது.

பாமகவுக்குப் போட்டியாக, தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இக்கட்சியின் தலைவர்ஏ.சி.சண்முகம் அறிவித்தார். திமுக கூட்டணியிலிருந்து விலகியவுடன், அதிமுக கூட்டணியில் சேர "காக்கா" பிடிக்கஆரம்பித்தார் சண்முகம். அதிமுகதான் சரியான கூட்டணி என்று அவர் பேட்டிகள், அறிக்கைகள் விடவும்ஆரம்பித்தார்.

இந்த நிலையில் அதிமுகவுக்கே இந்தத் தேர்தலில் ஆதரவு என்று வெளிப்படையாக அவர் அறிக்கை விட்டார்.ஆனால் அதிமுகதரப்பில் எந்த சப்தத்தையும் காணோம். புதிய நீதிக் கட்சியை தனது கூட்டணியில் ஜெயலலிதாசேர்ப்பாரா, மாட்டாரா என்பதே தெரியாத நிலையில், தனது கட்சிக்கான தேர்தல் பணிக்குழுக்களை சண்முகம்அறிவித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுக்களை அவர் அறிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற