பிளஸ் 2 இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு: விருப்பமான பாடத்தை மட்டும் எழுதலாம் - உயர் நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிளஸ் 2 இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடங்களை மட்டும்எழுதினால் போதுமானது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் தம்பித்துரை இதுகுறித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.அதில், மதிப்பெண்களை உயர்த்துவதற்காக இம்ப்ரூவ்மெண்ட் எழுதும் மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில்மட்டுமல்லாது அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதவேண்டும்.

மேலும் இந்தப் புதிய முறை இந்தக் கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து வக்கீல் பாக்கியராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பிளஸ் டூ மாணவர்கள் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்புகல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்படாததால், இந்த புதிய முறையால்அவர்கள் பாதிப்படைவார்கள்.

எனவே தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்பாக்கியராஜ்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் றீதிபதிசிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்படாததால், பழையமுறைப்படியே இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

மேலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் இந்த மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் அறிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற