வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரை அது நடக்கிறது.

தேர்தல் சூடு துவங்கி விட்டாலும் கூட, பெரும்பாலான கட்சிகள் இன்னும் தேர்தலுக்குத் தயாராகவில்லை. பலகட்சிகள் இன்னும் வேட்பாளர்களையே முடிவு செய்யவில்லை. சில கட்சிகள் இன்னும் எந்த முயற்சியையும்எடுக்காமல் உள்ளன. பல கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இதுவரை தமிழகம் முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பேரூராட்சி, கிராமப் பஞ்சாயத்து, யூனியன்போன்றவற்றிற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் சுயேச்சைகள் அல்லதுமுக்கிய அரசியல் கட்சிகள் சாராத வேட்பாளர்கள்.

நகர்ப்புறங்களில் 1,060க்கும் மேற்பட்டோர் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவர்களில்முக்கியமானவர் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாலகங்கா.

செவ்வாய்க்கிழமை காலை அவர் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலுவிடம் தனது வேட்பு மனுவைக்கொடுத்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர் மதுசூதனன், ராஜ்யசபாஎம்.பியான எஸ்.எஸ். சந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற