புதிய நீதிக் கட்சியின் பலே பல்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தாங்களாகவே கூறி வந்த புதிய நீதிக்கட்சி இப்போது தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக தாங்களும் உருவாக வேண்டும் என்றஎண்ணத்திலோ என்னவோ, சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணிவைத்திருந்த புதிய நீதிக் கட்சி தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக்கு முழுக்குப்போடுவதாகவும், அதிமுக கூட்டணியில் சேரப் போவதாகவும் அறிவித்தது.

பிறந்து சில மாதங்களே ஆகிய புதிய நீதிக் கட்சிக்கு இவ்வளவு துணிச்சலான முடிவாஎன்று மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் அதிமுகவுக்கே தேர்தலின்போதுஆதரவு, அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.

ஆனால் அதிமுகவிலிருந்து ஒரு சாதாரண தொண்டர் கூட ஏ.சி.சண்முகத்தை கூட்டணிதொடர்பாக எட்டிப் பார்க்கவில்லை. இதனால் அப்செட் ஆகிப் போன ஏ.சி.சண்முகம்,தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்அவசரமாக சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம்சண்முகம் பேசுகையில், அதிமுகவிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்என்று எதிர்பார்த்தோம். ஆனால் யாரும் வரவில்லை. எனவே தனித்துப் போட்டியிடும்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

வேட்பு மனுத்தாக்கலுக்கு குறுகிய கால அவகாசமே உள்ளதால், மாவட்டங்களில்உள்ள கட்சிப் பிரகர்கள், தங்களது பகுதி வேட்பாளர்களை அவர்களாகவே முடிவுசெய்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டுள்ளேன். சென்னை மேயர்பதவிக்கு ராமகிருஷ்ணனும், சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ரவிச்சந்திரனும்போட்டியிடுவர்.

நான் திமுககூட்டணியில் சேர்ந்ததுதான் மிகப் பெரிய தவறு. அதனால்தான் எங்களதுகட்சி தோல்வியடைந்தது. புதிய நீதிக் கட்சியின் வீழ்ச்சிக்கு திமுகவே காரணம் என்றார்அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற