அமெரிக்க தலைவரை பேச அழைக்கும் தாலிபான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சனை அமைதிப் பேச்சுவார்த்தைநடத்த வருமாறு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதன்கிழமை தனக்கு அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில், தலிபான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக ஜாக்சன்கூறியுள்ளார்.

அமெரிக்கா தாக்கினால், ஏராளமான அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் இதைத்தவிர்ப்பதற்காகவே தலிபான் அரசு இந்த அவசரத் தந்தியை ஜாக்சனுக்கு அனுப்பியுள்ளது.

"என்னுடைய பேச்சுவார்த்தையால், அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றால், அதற்குநான் தயார்" என்று ஜாக்சன் கூறியுள்ளார்.

ஆனாலும், அவர் தலிபான்களின் அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைப் பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை.

பின் லேடனை ஒப்படைக்க மறுத்த தலிபான்களுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றுஅமெரிக்கா தெளிவாகக் கூறிவிட்ட போதிலும், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஆப்கனுக்கு ஜாக்சன்செல்வதற்குத் தடை ஒன்றம் விதிக்கவில்லை.

பல வெளிநாடுகளிலும், தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட அமெரிக்கர்களை மீட்பதில் முக்கியப் பங்குவகித்தவர் ஜாக்சன். 1999ல் யூகோஸ்லேவியாவில் செர்பியர்களால் கடத்தப்பட்டிருந்த 3 அமெரிக்க வீரர்களைப்பாதுகாப்பாக மீட்ட பெருமை ஜாக்சனைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பர் இனத்தின் உரிமைக்காகவும் போராடி வருபவர் ஜாக்சன். அமெரிக்காவில் அனைத்துத்தரப்பினரிடையேயும் பெரும் மரியாதையைப் பெற்றவர் இவர். ஒரு தேவாலயத்தில் பாதிரியாராகவும் உள்ளார்ஜாக்சன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற