For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில நடுக்கம்: தமிழகத்துக்கு அதிக பாதிப்பு வராது- நிபுணர்கள் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நிலநடுக்கப் புவியியல் அடிப்படையில் இந்தியா 5 கொண்ட மண்டலமாகபிரிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகமும் பாண்டிச்சேரியும் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்படையாத இரண்டாவதுமற்றும் மூன்றாவது மண்டலங்களின் கீழ் வருவதால் அதிக பாதிப்படையாத மாநிலங்கள்என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோல் மூலம் அளக்கப்படுகிறது. நிலநடுகத்தின்தீவிரம் மெக்காலி கருவி (எம்.எம்.) மூலம் கணக்கிடப்படுகிறது.

எம்.எம். கருவியில் 9 புள்ளிகள் பதிவானால் அது மிக பெரிய நிலநடுக்கமாகும். எம்.எம்.கருவியில் 5 புள்ளிகள் பதிவானால் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத நிலநடுக்கமாகும்.

இதை அடிப்படையாக கொண்டு இந்தியா 5 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.

1வது மண்டலம்:

1வது மண்டலத்தின் கீழ் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் வருகின்றன. இந்தபகுதிகளில் 5 புள்ளிகள் அளவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத நிலநடுக்கம் தான் வரும்.

2வது மண்டலம்:

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலு, பாண்டிச்சேரியும் இந்த 2வது மண்டலத்தின் கீழ்வருகின்றன. இங்கு அதிகபட்சமாக 6 புள்ளிகள் வரை பதிவாகக்கூடிய நிலநடுக்கம்ஏற்படும் வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளன.

3வது மண்டலம்:

தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, வேலூர் மற்றும் தர்மபுரிமாவட்டங்கள் 3வது மண்டலத்தின் கீழ் வருகின்றன. இங்கு 7 புள்ளிகள் வரைபதிவாகக்கூடிய நில நடுக்கம் ஏற்படும் சாத்தியக்கூறுதான் அதிகமாக உள்ளது.

4வது மண்டலம்:

டில்லி, மும்பை, கோல்கத்தா நகரங்கள் 4வது மண்டலத்தில் உள்ளன. இங்கு ஒரளவுகடுமையான பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

5வது மண்டலம்:

5வது மண்டலத்தில் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.இந்த மண்டலத்தில் எம்.எம். கருவியில் 9 புள்ளிகளை எட்டும் அளவுக்கு பெரும் பூகம்பம்ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த பூகம்பம் மிக பலத்த சேதத்தைஏற்படுத்தும்.

சென்னை நகரம் பாதிப்பு குறைவாக உள்ள 2வது மண்டலத்தில் உள்ளது என்று கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X