ஜெயேந்திரர் சீனாவுக்கு செல்ல தடை விதிக்கக்கோரி வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் சீனாவுக்கு செல்ல தடை விதிக்க வேண்டும்என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலிருக்கும் சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவர் அடுத்த மாதம் (அக்டோபர்) இரண்டாம் வாரம் சீனா செல்லவிருக்கிறார்.

இவர் சீனாவிற்கு செல்ல அனுமதியளிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தசங்கர் ராமன் மற்றும் பத்மா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சீனாவிற்கு செல்வதன் மூலம் மடத்திற்கு களங்கம் ஏற்படும். முன்பு ஜாவாநாட்டைச் சேர்ந்த நடனக்குழுவினர் பெரியவரை தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால்பெரியவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

மடத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக ஜெயேந்தி சரஸ்வதி சுவாமிகள் சீனா செல்வது தவறு. 1993ம் ஆண்டுகாஞ்சிபுரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அர்ச்சகர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது இந்து ஆகம விதிகளுக்குஎதிரானது என்று கூறியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்வபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலைய சட்டம் 22வதுபிரிவு59வது விதியிலும் கூறப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் சங்கர மடம் செயல்பட்டு வருவதால்இந்த சட்டம் மடத்திற்கும் பொருந்தும்.

சீனாவில் பாம்புகள், நாய்களை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் சீனாவிற்குசெல்ல அனுமதிக்கப்பட்டால் சங்கரரின் வழித்தோன்றல்கள் என்று சொல்வதற்கே அவப் பெயர் வந்துவிடும்.

எனவே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சீனா செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் வழக்கை அடுத்தமாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற