வெற்றிக்கு உழைக்க கூட்டணிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் அவரவர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் என நினைத்துகூட்டணியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கூட்டணிப் பங்கீட்டில் தமது கட்சி செல்வாக்குப் பெற்ற பகுதியில் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்காக அந்தக்கட்சி வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டாம் என்று கருணாநிதி கூறினார்.

இதுகுறித்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

உள்ளாட்சி மன்றப் பொறுப்புகளில் அமர்வது, ஊர் மக்களுக்கு உழைப்பதற்காகத் தான். திமுக கூட்டணியில் உள்ளபா.ஜ.க., பா.ம.க., எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். கழகம்., மூ.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகளுக்குள் கூட்டணிப் பங்கீட்டில் பிரச்சனை ஏற்படுவது இயல்புதான். எனவே தங்கள் கட்சிசெல்வாக்காகத் திகழும் பகுதியில் வேறு ஒரு கட்சிக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டதே என்று யாரும்எண்ணவேண்டாம். கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அவரவர் தங்கள் கட்சி வேட்பாளராகநினைத்து அவரது வெற்றிக்கு உழைக்கவேண்டும்.

கரும்பு திண்ணும் போது அதன் ஈர்க்கு பல்லிடுக்கில் குத்தி ரத்தம் கசியும், அதற்காக கரும்பையே தூக்கிப் போடமுடியுமா? அதுபோலத்தான் கூட்டணியும் என்பதை உணர்ந்து அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் வெற்றிக்குப்பாடுபடவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற