உள்ளாட்சித் தேர்தல்: சிறை தண்டனை பெற்றவர்கள் போட்டியிட தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடுமையான குற்றங்களுக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர்கள் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில்போட்டியிட முடியாது என்று தமிழக மாநில தேர்தல் கமிஷனர். பி.எஸ் பாண்டியன் கூறியுள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கானவேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது.

வேட்பு மனு பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது வேட்புமனுக்களை திரும்ப பெற வரும்வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.

இந்நிலையில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தால் அவர்கள் வேட்புமனுநிராகரிக்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடுமையான குற்றங்களுக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர்கள், அது தவிர வேறு குற்றங்களுக்காக 2ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இது போல் தகுதியற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால் அவர்கள் வேட்புமனு, வேட்புமனுபரிசீலனையின் போது நிராகரிக்கப்படும் என்றார் பாண்டியன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற