For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி இறக்குமதி வழக்கு: அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா நேற்று (வியாழக்கிழமை) குற்றம் சாட்டினார்.

தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் தன்னுடைய வாக்குமூலத்தை அளித்தபோது ஜெயலலிதாஇவ்வாறு கூறினார்.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போது மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதிசெய்யததன் மூலம் அரசுக்கு ரூ 6.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீதும்,முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேர் மீது முந்தைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு 2வது தனி நீதிமன்றத்தில் நீதிபதி தார்வேஸ் முன் நடந்துவருகிறது. இந்த வழக்கில் கடந்த புதன்கிழமைஜெயலலிதா ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் தன்னால் நேரில் ஆஜாராகி வாக்குமூலம் அளிக்க முடியாது என்றும். நீதிபதி கேட்கும் கேள்விகளுக்குதனது வழக்கறிஞரை பதிலளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியும் ஜெயலலிதா மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்படாததால் வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள்இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா வர இருப்பதால் அதுவரை வழக்குவிசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்குவிசாரணையை மாலை வரை ஒத்தி வைத்தார்

ஜெயலலிதா வாக்குமூலம்

நீதிபதி கேட்ட கேள்விக்களுக்கு ஜெயலலிதா பதிலளித்து கூறியதாவது:

நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை. ஆனால் நிலக்கரிஇறக்குமதியில் ஊழல் நடந்ததாக கூறி ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி புகார் கொடுத்ததற்கு அரசியல்காழ்ப்புணர்ச்சியே காரணம்.

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக வந்த புகார் குறித்து விசாரிக்க நீதிபதி சந்துர்கர் தலைமையிலானகமிஷன் ஒன்றை அரசு அமைத்தது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின் அந்த கமிஷன் கலைக்கப்பட்டது. நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுநடைபெறவில்லை என்று தெரிந்திருந்தும் என் மீது வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் இருந்து வந்த மினபற்றாக்குறையை தவிர்ப்பதற்காக, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டுநிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.

மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று அப்போதையதலைவர் ஹரிபாஸ்கர் திட்டம் ஒன்றை தலமைைச் செயலகத்திற்கு அனுப்பியிருந்தார்.

அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு. அரசு அனுமதியை பெற தலைமைச் செயலகஅதிகாரிகள் அது தொடர்பான கோப்பை சர்குலேட் செய்து. அதன் பின் இறுதியில் முதல்வரின் கையெழுத்துக்காகஅந்த கோப்பு அனுப்பப்படும்.

நிலக்கரி இறக்குமதியிலும் இந்த முறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால் நிலக்கரி இறக்குமதி தொடர்பான கோப்பில்முன்னாள் பொதுப்பணித்துறை செயலாளர் ஆட்சேபம் தெரிவித்திருந்ததாகவும், அந்த பக்கங்கள் காணாமால்போய்விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்குவரி விலக்கு அளிக்குமாறு கேட்டிருந்தேன்.

அது ஒப்புக் கொள்ளப்பட்டு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு கருவூலத்திலிருந்த ரூ.50 கோடிகாப்பற்றப்பட்டது. இதனால் மின் உற்பத்தி செலவு அதிகமாகவில்லை . பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை.

எனக்குஎதிராக இந்த வழக்கை தொடர ஆளுனர் அனுமதி அளித்தது செல்லாது. முதல்வருக்கு எதிராக வழக்குதொடர ஆளுனர் அனுமதி அளிக்கலாமா என்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலால்தான் புலன்விசாரணை அதிகாரி சவுகத் அலி எனக்கு எதிராக சாட்சிஅளித்ததாக குறுக்குவிசாரணையின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.

என் பெயருக்கும், என் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.நிலக்கரி இறக்குமதியால் தமிழகத்தில் மின் வெட்டு தவிர்க்கப்பட்டது. அரசின் பணமும் காப்பாற்றப்பட்டது என்றார்ஜெயலலிதா.

17ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் சாட்சிகள் உள்ளதா என்று நீதிபதி கேட்ட போது சாட்சிகள் எதுவும் இல்லைஎன்று ஜெயலலிதா பதிலளித்தார்.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹரிபாஸ்கர் தனது தரப்பிலுள்ள ஒருசாட்சியை விசாரிக்க அனுமதி கோரியுளார்.

இந்த சாட்சியை விசாரிப்பதற்காக வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தார்வேஸ் உத்தரவிட்டார்.ஹரிபாஸ்கர் தரப்பு சாட்சி விசாரிக்கப்பட்ட பின் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X