For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபர்ஸ் ஊழல்: குற்றவாளி வின் சட்டா மரணம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வின் சட்டா இன்று (புதன்கிழமை) அதிகாலைமாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர் லண்டனில் வசித்து வந்தார். போபர்ஸ் நிறுவனத்தின் ஆயுத ஏஜென்டாக செயல்பட்டு வந்தார் சட்டா.

இந்தியா போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியபோது, ரூ.64 கோடி ஊழல் நடந்தது. இதில் வின் சட்டாவுக்கு முக்கியப்பங்கு இருப்பதாக தெரிய வந்தது.

இவர் தவிர ஹிந்துஜா சகோதரர்களும் இந்த ஊழலில் சிக்கினர். இத்தாலியைச் சேர்ந்த குவெட்ரோச்சி முக்கியகுற்றவாளியாக சிபிஐயால் சேர்க்கப்பட்டார். இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜீவ் காந்தி 1989ல் நடந்ததேர்தலில் மாபெரும் தோல்வியடைந்தார்.

சட்டாவுக்கு உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் உள்ளன. போபர்ஸ் ஊழல் விசாரணை காரணமாக அவர்இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் டெல்லியில் தங்கியிருந்தார்.

77 வயதான சட்டாவுக்கு கடந்த பல மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி என பல நோய்கள் இருப்பதால், சிகிச்சைக்காக தன்னை துபாய் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றுடெல்லி தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய கோரிக்கையை தனி நீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது வீட்டிலேயேமரணமடைந்தார்.

வின் சட்டாவின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்றும் அவரது உடல் டெல்லியில் லோதி சாலையில்உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இறந்தவர்களில் வின் சட்டா இரண்டாவது நபர் ஆவார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் முன்னாள் பாதுகாப்புத் துறைச்செயலாளருமான எஸ்.கே. பட்நாகர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X