For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் தமிழர்கள் வாக்களிக்க தடை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையின் வட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களை வாக்களிக்க விடாமல் அரசு தடுத்து வருகிறது.

இலங்கையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இலங்கையின் வட பகுதியில் வவுனியாவில் தான் வாக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இங்கு வருவதற்கு உள்ள வழிகளை ராணுவம்மூடிவிட்டது.

இதனால், தமிழர்கள் வாக்களிக்க வவுனியாவுக்குள் வர முடியாத நிலை உருவாகியுள்ளது. மீறி வரும் தமிழர்களைராணுவம் அடித்து விரட்டி வருகிறது.

வன்னி மாகாணத்தில் உள்ள பிரமணலன்குளம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியைத் தாண்டி எந்தத்தமிழரையும் வவுனியாவுக்குள் வர ராணுவம் அனுமதிக்கவில்லை. அதே போல மட்டக்களப்பிலிருந்து வரும்மூன்று முக்கிய சாலைகளையும் ராணுவம் மூடியுள்ளது.

இதனால் முல்லைத் தீவி, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாகாணங்களில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களால்வாக்களிக்க முடியவில்லை.

அதே போல புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி கூட அமைக்கப்படவில்லை. இதனால்பெரும்பாலான தமிழர்களால் வாக்களிக்க முடியவில்லை.

அரசின் இந்த அடக்குமுறைக்கு தமிழக ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எப்.) கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தமிழர்களை வாக்களிக்க விடாமல் ஆளும்கட்சி தடுக்கிறது என்று டி.யூ.எல்.எப். குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு ராணுவத்தினர் கூறுகையில், இந்த வழித்தடங்களை மூடாவிட்டால், வாக்களிக்கும் இடங்களில் விடுதலைப்புலிகளால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கைளால் 60,000 பேர் வரை வாக்களிக்க முடியாமல்போகலாம் என்றனர்.

ஆனால், மொத்த வழிகளையும் அடைத்துவிட்டதன் மூலம் லட்சக்கணக்கான தமிழர்களின் வாக்குறிமையை அரசுபறித்துள்ளது.

தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொழும்பை சுற்றி ராணுவம்நிறுத்தப்பட்டுள்ளது.

225 எம்.பிக்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடக்கிறது. இதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 5,000வாக்காளர்களும் 99 சுயேச்சை உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஓட்டுப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். 18 வயது முடிவடைந்தஅனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.25 கோடி பேர் இதில் வாக்களிக்கின்றனர். இதில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள். ஆனால்,இவர்களில் பெரும்பாலானோரை வாக்களிக்க விடாமல் அரசு தடுத்துள்ளது.

கண்டியில் வன்முறை:

காலையில் தொடங்கிய தேர்தல் அமைதியுடன் நடந்து வருகிறது. கண்டியில் மட்டும் குண்டு வெடிப்பும், போலீஸ்துப்பாக்கிச் சூடும் நடந்தது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மாலையே முடிவுகளும்வெளிவரத் தொடங்கிவிடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X