For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதத் தலைவன் மசூத், 30 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்திய, அமெரிக்க நெருக்குதல் காரணமாக ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவனான மசூத் அஸார்நேற்றிரவு கைது செய்யப்பட்டான். இவனது அமைப்பைச் சேர்ந்த 30 தீவிரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த கைது வெறும் நாடகம் என இந்தியா கூறிவிட்டது.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியஅமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா ஆதாரங்களை அனுப்பியும் பாகிஸ்தான்முதலில் நடவடிக்கை எடுக்கத் தவறியது.

இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் திரும்பி அழைக்கப்பட்டார். எல்லையில் ராணுவமும்குவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 23ம் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட மசூத், பின்னர் சில மணி நேரங்களிலேயேவிடுவிக்கப்பட்டான்.

ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானைத் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்தன.

இதனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மசூத் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இவனது கும்பலைச் சேர்ந்த மேலும் 30 தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் போலீசார் இன்று மாலை பாவல்பூர் நகரில்இருந்து கைது செய்தனர்.

3 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் இந்தியப் படைகளிடம் சிக்கிய மசூத் அஸார் காஷ்மீர் சிறையில்அடைக்கப்பட்டிருந்தான். இவனை விடுவிக்கக் கோரி தான் நேபாளத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்தை பாகிஸ்தான் கும்பல் காண்டஹாருக்குக் கடத்திச் சென்றது.

விமானப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக இவனை இந்திய அரசு விடுவித்தது. இவனை வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்தி சிங் சிறப்பு விமானத்தில் அழைத்துச் சென்று காண்டஹாரில் விட்டுவிட்டு வந்தார்.

இதன் பின்னர் இவர் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு வசித்து வருகிறான். இவனை கைது செய்து தன்னிடம்ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பலமுறை கோரிக்கை விடுவித்தும் அதை பாகிஸ்தான்கண்டுகொள்ளவேயில்லை.

இப்போது கைது நாடகம் நடத்தி உலகை ஏமாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இந்தியா கருத்து:

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், பேருக்கு கைது செய்வது, வங்கிக் கணக்கைமுடக்கிவிட்டதாக நாடகம் போடுவது, தீவிரவாத அமைப்பு தனது பெயரை மாற்றிக் கொண்டால் அதை மீண்டும்இயங்க அனுமதிப்பது போன்ற செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இந்த மாதிரி பாகிஸ்தான் வேஷம் போடுவது நமக்குப் புதிதல்ல. தீவிரவாத அமைப்பின் தலைவர் அஸார் மசூத்மீது உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கை என்றார்.

மசூத் கைது- உண்மைக் காரணம் என்ன?

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டவுடன் இந்தத் தாக்குதலை நடத்தியது எங்கள் அமைப்பு தான் என்றுபாகிஸ்தானின் பல பத்திரிக்கை ஆசிரியர்களையும் அழைத்து அஸார் கூறியுள்ளான்.

ஆனால், இதை மறைக்கத் திட்டமிட்ட பாகிஸ்தான் அரசு இந்தச் செய்தியை வெளியிட வேண்டாம் என பத்திரிக்கைமுதலாளிகளிடம் கூறிவிட்டது. இதனால், அஸார் கூறிய செய்தியை எந்தப் பத்திரிக்கையும் வெளியிடவில்லை.

தான் நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் அரசு இருட்டடிப்பு செய்துவிட்டதாகக் கருதிய மசூத், பாகிஸ்தானின் பலபத்திரிக்கை ஆசிரியர்களையும் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. நாங்கள் இந்தியாவைத்தாக்கிய செய்தியை வெளியிடாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என அவன் மிரட்டினான்.

இதையடுத்து முஷாரபிடம் பத்திரிக்கை ஆசிரியர்கள் புகார் கூறினர். இவனால், உலக அளவில் பாகிஸ்தானின்பெயர் மேலும் நாறிவிடும் என்பதால் தான் இவனை கைது செய்யவும், யாரையும் சந்திக்கவிடாமல் வீட்டுக்காவலில் வைக்கவும் முஷாரப் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா மீது தாக்குதல் நடத்தியதால் அவன் கைது செய்யப்படவில்லை. இந்த உண்மையை வெளியில்சொல்லிவிடாமல் தடுப்பற்காகத் தான் கைது செய்யப்பட்டுள்ளான்.

மேலும், சமீபத்தில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் தம்பியின் கொலையிலும் மசூதுக்குதொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவை முஷாரப் ஆதரித்ததை எதிர்த்து தனது ஜெய்ஷ் பத்திரிக்கையில்முஷாரபை மிகக் கடுமையாக விமர்சித்து மசூத் எழுதி வந்தான். இவனை கைது செய்ய காரணத்துக்காக காத்திருந்தமுஷாரப் இப்போது இந்திய, அமெரிக்க நெருக்குதலால் அவனை ஒருவழியாய் வீட்டுக் காவலில் தள்ளியுள்ளார்.

மிகத் தீவிரமான சன்னி தியோபந்தி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த அவன் ஷியா இன முஸ்லீம்களுக்கு எதிராகசெயல்பட்டு வருகிறான். பாகிஸ்தானில் சமீப காலத்தில் பல ஷியா முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில்மசூதுக்குத் தொடர்புண்டு.

தன்னை இஸ்லாமியர்களின் கலிபாவாக (தூதுவர்) நியமிக்க வேண்டும் என தலிபான் தலைவன் முல்லா முகம்மத்ஒமரிடம் பல காலமாகக் கோரி வந்தான். ஆனால், இவனது கோரிக்கையை ஒமர் நிராகரித்துவிட்டான்.

பாகிஸ்தானுக்கே பெரிய பிரச்சனையாகிவிட்டதால் தான் இவன் இப்போது கைதாகியுள்ளான். அதே நேரத்தில்இந்தக் கைதின் மூலம் இந்தியாவையும் சமாதானப்படுத்திவிட முடியும் என முஷாரப் கருகிறார்.

இந்தக் கைது போதாது. எல்லா தீவிரவாதிகளுக்கும் எதிராக உண்மையிலேயே பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிவிட்டது இந்தியா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X