For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-யு.ஏ.இ. தொலைபேசி கட்டணம் குறைப்பு

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையேயான தொலைபேசிக் கட்டணங்கள் விரைவில்குறையவுள்ளன.

இதற்காக 2 நாடுகளும் பேச்சளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இதேபோல் கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த 2 நாடுகளும் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

இதனால் இந்த 2 நாடுகளிலும் வர்த்தகம் அதிகரித்தது. தொலைபேசி வருவாயும் பெருக ஆரம்பித்தது.

இதையடுத்து இந்தக் கட்டணங்களை மேலும் குறைப்பதற்கு 2 நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இந்தப் புதிய ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என்று ஐக்கிய அரபு நாடுகளின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அகமது ஹுமாய்த் அல் டாயர் தெரிவித்தார்.

அரபு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு 4 தொலைபேசி அழைப்புகள் வந்தால், இங்கிருந்து அந்நாட்டுக்கு 1தொலைபேசி அழைப்பு நடக்கிறது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்படும் தொலைபேசி அழைப்புகளில் 45 சதவீதம்வளைகுடா நாடுகளுக்குத்தான் செய்யப்படுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X