For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி நிறுவனத்திடம் மீண்டும் ஏமாந்த சென்னை மக்கள்: பல கோடி இழப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சில ஆண்டுகளுக்கு முன்புவரை சீட்டு கம்பெனி, நிதி நிறுவனம் என அதிக லாபத்துக்கு பேராசைப்பட்டு பணத்தைக்கட்டி ஏமாந்த மக்கள் இப்போது மீண்டும் நூதன மோசடிக்குப் பலியாகி பல கோடிகளை இழந்து நிற்கின்றனர்.

100 சதவீத வட்டி தருகிறோம், 50,000 ரூபாய் கட்டினால் 6 மாதத்தில் கார் தருகிறோம் எனக் கூறிய மோசடி நிதிநிறுவனக் கும்பல்களிடம் ஏமாந்த பின்னரும் நம் மக்கள் திருந்தவில்லை. பலர் தங்கள் ஓய்வூதியத் தொகைையைக்கூட இந்த மோசடிப் பேர்வழிகளிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டுக்கே திண்டாடி வருகின்றனர்.

இந் நிலையில் டெல்லியைச் சேர்ந்த நிறுவனத்திடம் சென்னை மக்கள் ஏமாந்து போய் பணத்தை இழந்துள்ளர்.சிம்பையோனிக் என்ற இந்த நிறுவனம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் கடந்த 2ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் ரூ.54,250 கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு, ரூ.30,000மதிப்புள்ள வைர, தங்க நகைகள் தருவோம். பிரிட்ஜ், கலர் டிவி போன்ற பொருள்கள் தருவோம். இது தவிர பெரியநகரங்களில் ரிசார்ட்ஸில் 6 தடவைகள் தங்கிக் கொள்ளவும் வசதி செய்து தருவோம் என கவர்ச்சிகரமான திட்டத்தைஅறிவித்தனர்.

மேலும் ஒரு உறுப்பினர் புதிதாக இன்னொரு உறுப்பினரைச் சேர்த்துவிட்டால் அவருக்கு ரூ.5,000 தரப்படும். 3வதுஉறுப்பினரை சேர்த்துவிட்டால் ரூ.12,500 தரப்படும். அதற்கு மேல் தொடர்ந்து ஒவ்வொரு உறுப்பினரை சேர்க்கும்போதும் ரூ.12,500 கமிஷனாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக பிரபல வக்கீல்கள் மற்றும் பிரமுகர்கள் இருப்பதாகவும் இந்த நிறுவனகுறிப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்த கவர்ச்சிகரமான திட்டத்தில் மயங்கி, டாக்டர்கள், வங்கி ஊழியர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல தரப்புமக்களும் ரூ.54,250 செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

சென்னையில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களானார்கள். இவர்களிடமிருந்து பல கோடிரூபாய்கள் வசூலாகியது. பணம் கட்டிய உறுப்பினர்களுக்கு தங்க நகைகள், கம்ப்யூட்டர்கள், பிரிட்ஜ் போன்ற விலைஉயர்ந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தான் இந்த பொருட்கள் மட்டரகமானவை என்றும், ரூ.30,000 என்று கூறப்பட்டவைர நகைகளின் மதிப்பு ரூ.5,000 என்றும் உறுப்பினர்கள் அறிந்தனர். தரப்பட்ட பல நகைகளும் 14 காரட்தங்கத்தில் செய்யப்பட்ட போலி நகைகள் என்பதும் தெரியவந்தது. அதோடு ரிசார்ட்ஸில் தங்க வசூல் செய்யப்பட்டவாடகை கட்டணம் அதிகம் என்றும் தெரிய வந்தது. மேலும் யாருக்கும் கமிஷன் பணத்தையும் தரவில்லை.

இதனால் தாங்கள் நன்றாக ஏமாற்றப்பட்டு இருப்பதை உறுப்பினர்கள் உணர்ந்து, அந்த நிறுவனத்திடம் சென்றுநகைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

அப்போது அந்த நிறுவனத்தினர் எல்லா உறுப்பினர்களிடமும், நகைகளை மாற்றிக் கொடுக்கிறோம், ஆனால்அதற்கு கூடுதலாக ரூ.5,000 கட்ட வேண்டும். மேலும் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ள ரூ.500 செலுத்தவேண்டும் என்றும் பணத்துடன் அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமணமண்டபத்திற்கு 5ம் தேதி மாலை வரும்படியும் கூறியுள்ளனர்.

இதன்படி திருமண மண்டபத்தில் உறுப்பினர்கள் சுமார் 4,000 பேர் திரண்டனர். அவர்கள் ரூ.5,500 பணமும்கொண்டு வந்திருந்தனர். அங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் அந்த நிறுவனத்தை சேர்ந்த கிரீஷ், ஆரிப்கான்,சுதேஷ் மல்லிஜ் உள்பட 8 பேர் பேசியுள்ளனர்.

உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர் பாடம் சொல்லிக் கொடுப்பதாகவும், குறைந்த கட்டணத்தில் ரிசார்ட்சில் தங்கிகொள்ள ஏற்பாடு செய்வதாகவும், மேலும் ஏற்கனவே கொடுத்த பொருட்களுக்குப் பதிலாக விசிடிகொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் தாங்கள் திரும்பவும் ஏமாற்றப்படுவோம் என்ற நினைத்த உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தை சேர்ந்தஅதிகாரிகளை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தருமாறு கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பதட்டம் நிலவியது. பலர் அண்ணாசாலையில் நின்றும் கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல்அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த அதிகாரிகளை போலீசார் வேனில் கூட்டிக் கொண்டுகமிஷனர் அலுவலகத்துக் சென்றனர். பொது மக்களை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் தருமாறும் கூறினர்.

இதையடுத்து பொது மக்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று அந்த நிறுவனம் மீது புகார்களை எழுதிகொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடி நிறுவன அதிகாரிகளை விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X