For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஷ்கர்-ஏ-தொய்பா தலைவன் கைது: பாக். நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

ஜம்மூவில் ராணுவக் குடியிருப்பில் தாக்குதல் நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன்ஹபீஸ் முகம்மத் சயீதை பாகிஸ்தான் அரசு அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது.

இந்தியா தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ள 20 தீவிரவாதிகள் கொண்ட பட்டியலில் இவனது பெயரும்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு தான் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கும்காரணமாகும்.

முதலில் இத் தாக்குதலுக்கு அல்-மசூரான் மற்றும் ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் பொறுப்பேற்றன.ஆனால், இந்தத் தாக்குதலை நடத்தியது லஷ்கர்-ஏ-தொய்பா தான் என்று இந்தியா ராணுவத்தின் உளவுப் பிரிவுகள்கண்டறிந்தன.

இந்தத் தீவிரவாதிகளின் வயர்லெஸ் பேச்சுக்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம் இத் தகவல் உறுதியானது.

இந்தத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானைத் தாக்கியே ஆக வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கைஎழுந்துள்ளது. மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இதனால்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கவலையடைந்துள்ளார்.

மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிரிஸ்டினா ரோக்கா இந்தியாவில் இருந்தபோது இந்தத்தாக்குதலை நடத்தி முஷாரப் முகத்தில் கரியைப் பூசி விட்டது அவர் வளர்த்துவிட்ட தீவிரவாத அமைப்பு.

இத் தாக்குதலையடுத்து இந்தியாவின் கோபத்தை அமெரிக்காவும் புரிந்து கொண்டுவிட்டது. லஷ்கர் அமைப்பின்மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் சென்ற கிரிஸடினா வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்தக் காரணங்களால் லஷ்கர்-ஏ-தொய்பாவை நிறுவிய அதன தலைவன் ஹபீஸ் முகம்மத் சயீதை கைதுசெய்துள்ளார் முஷாரப். இதன்மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோபத்தைத் தணிக்க முடியும் என அவர்நம்புகிறார்.

பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவரை பாகிஸ்தான் உளவுப் பிரிவினர்கைது செய்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து கைதுசெய்தனர்.

அமெரிக்க நெருக்குதலால் கடந்த ஜனவரியிலேயே இவனை முஷாரப் கைது செய்தார். ஆனால், இவன் மீதானகுற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவனை நீதிமன்றம் சமீபத்தில் தான் விடுவித்தது.

தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தபோது இனி பாகிஸ்தானில் இருந்துசெயல்பட மாட்டோம் என்று அறிவித்த இந்த அமைப்பு அங்கு அலுவலகங்களை மூடியது. காஷ்மீரில்இருந்தவண்ணம் தீவிரவாதத்தில் ஈடுபடுவோம் என இந்த அமைப்பு அறிவித்ததை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார் முஷாரப்.

இப்போது இவனைக் கைது செய்திருப்பது கூட இந்தியா இவனைத் தாக்கக் கூடும் என்பதற்காகக் தான் என்றும்கூறப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து இவனைக் காப்பாற்றி பாதுகாக்கக் தான் இந்த கைது நாடகம்நடத்தப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இந் நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளமும்,ஊர்,பெயர் விவரமும் தெரியவந்துள்ளது. மூவருமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

இவர்களில் ஒருவன் பெயர் அபு சுகைல். இவனது தந்தை பெயர் அப்துல்லா. இவன் பைஸ்லாபாத்தைச் சேர்ந்தவன்.

இன்னொருவன் பெயர் அபு முர்ஷத் என்ற முகம்மத் முனீர். இவனது தந்தை பெயர் மெஹ்சபீன் ஷா ஜெப், இவன்குர்ஜன்வாலா நகரில் உள்ள ரஹ்வலி கண்டோண்மெண்டை அடுத்துள்ள சலாமத்புராவைச் சேர்ந்தவன்.

மூன்றவது தீவிரவாதியின் பெயர் அபு ஜாவித் என்ற அம்ஷத் சலாம் பின் முகம்மத் ஜிஸ்ஸா. இவனது தந்தை பெயர்அமீர் பின் ஜப்பி, இவனும் குர்ஜரபன்வாலாவைச் சேர்ந்தவன் தான்.

ராணுவம் மற்றும் இந்தியாவின் ரா உளவுப் பிரிவுகள் விசாரணையில் ஒரே நாளில் இந்தக் கும்பல் குறித்த முழுவிவரமும் வெளியாகிவிட்டது.

இந் நிலையில் ஜம்மூ தாக்குதலில் காயமடைந்த ஒரு ராணுவ வீரரின் மனைவி இன்று சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் குழந்தைகள், 9 பேர்பெண்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X