For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடைகிறது த.மா.கா.: 5 எம்.எல்.ஏக்கள் மீது வாசன் நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதை எதிர்த்து 5 தமாகா எம்.எல்.ஏக்கள்போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க த.மா.கா. தலைவர் வாசன்முடிவு செய்துள்ளார்.

தாங்கள் தமாகாவிலேயே தொடர்ந்து செயல்படப் போவதாகக் கூறி 5 பேரும் சபாநாயகரிடம் கடிதம்கொடுத்துள்ளனர்.

இந்த 5 எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் 14ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியுடன்இணைகிறது. இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் மதுரையில் நடந்து வருகின்றன.

இந்த இணைப்புக்கு எம்.எல்.ஏ. குமாரதாஸ் மட்டுமே முதலில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரைகட்சியை விட்டுக் கூட விலக்கி வைத்தார் வாசன். ஆனால் உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது.

ஜெயலலிதாவிடம் குமாரதாஸ் பெட்டி வாங்கிவிட்டதாக த.மா.கா. குற்றம் சாட்டியது.

ஆனால், இப்போது குமாரதாஸ் தலைமையில் ஹக்கீம், மணி நாடார், ஈஸ்வரன் மற்றும் செ.கு.தமிழரசன்ஆகியோரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அம்மா.. அம்மா.. அம்மா..

இதில் ஹக்கீம் எம்.எல்.ஏ. ஆனது முதலே அதிமுக எம்.எல்.ஏ. மாதிரி தான் செயல்பட்டு வருகிறார். சட்டசபையில்அம்மா புகழ் பாடுவதில் அதிமுக எம்.எல்.ஏக்களையே விஞ்சிக் காட்டியவர் இவர்.

இந்த 5 எம்.எல்.ஏக்களும் தாங்கள் த.மா.காவிலேயே நீடிப்பதாகவும், தங்களை த.மா.கா. எம்.எல்.ஏக்களாகதொடர்ந்து அங்கீகரித்து சட்டசபையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரி சபாநாயகர் காளிமுத்துவிடம்கடிதம் கொடுத்துள்ளனர்.

தமிழ் மாநில காங்கிரசுக்கு 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கட்சியைவிட்டுப் பிரியும் இந்த 5 பேரும் தங்கள்பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் மேலும் 3 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஆனால், இவர்கள்கட்சியை விட்டுப் பிரிந்ததாகக் கருதுவதா இல்லை தனித்து செயல்படுவதாகக் கருதுவதா என்பதை சபாநாயகர் தான் முடிவு செய்யவேண்டும்.

சபாநாயகர் பேட்டி:

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காளிமுத்து கூறுகையில், 5 எம்.எல்.ஏக்களின் கடிதம் குறித்து இன்னும் நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களிடம்கலந்து ஆலோசித்த பின்னர் முடிவை அறிவிப்பதாக அவர்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

இருப்பினும் எந்த முடிவாக இருந்தாலும் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு முன்பாகவே (இணைப்பு வினாவுக்கு முன்னதாக) அறிவிக்கப்படும்.

கடந்த காலத்தில் அதிமுக இரு பிரிவாக உடைந்த போது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் சேராமல் தனித்தே இருந்தார் ஜானகி பிரிவுஎம்.எல்.ஏவான பி.எச்.பாண்டியன்.

இரு பிரிவு அதிகவும் ஒன்றாக இணைந்த பின்னரும் கூட அவர் ஒருங்கிணைந்த அதிமுகவில் சேரவில்லை. அப்போது ஆட்சியில் இருந்தது திமுக என்பதை இந்தநேரத்தில் நினைவு கூர விரும்புகிறேன் என்றார் காளிமுத்து.

காளிமுத்துவின் இந்தப் பேச்சின்மூலம், இந்த 5 பேரையும் அவர் தனித்து செயல்பட அனுமதிக்க வாய்ப்பிருப்பதாகத் தான் தெரிகிறது. ஆனால், அவ்வாறுஅவர் அனுமதித்தால் அதை எதிர்த்து த.மா.கா. வழக்குத் தொடரலாம்.

கடித விவரம்:

ஐந்து தமாகா எம்.எல்.ஏக்களும் காளித்துவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாங்கள்தான் உண்மையான தமாகா எம்.எல்.ஏக்கள். எங்களது சுயஅடையாளத்தை இழக்க நாங்கள் விரும்பவில்லை. கட்சியினரின் சம்மதம் இல்லாமல் கட்சியை காங்கிரஸுடன் இணைக்கிறார்கள்.

ஒருவேளை இணைப்பு நடைபெறாவிட்டால் எங்களது கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கட்சி விரோத நடவடிக்கை: வாசன்

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய த.மா.கா. தலைவர் வாசன், கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட இந்த 5 எம்.எல்.ஏக்களுக்குஎதிராகவும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி விவாதித்துத் தான் காங்கிரசுடன் இணைய முடிவு செய்யப்பட்டது. பொதுக் குழுவின் முடிவைகட்சியில் உள்ள அனைவரும் ஏற்றாக வேண்டும். கட்சியை காங்கிரசுடன் இணைப்பது என்று நான் முடிவு செய்தபோது அனைத்துஎம்.எல்.ஏக்களும் அதை ஆதரித்தனர்.

இடையில் என்ற நடந்தது என்று தெரியவில்லை. கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இந்தஇணைப்பை வரவேற்றுள்ளனர் என்றார் வாசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X