For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பாபா" விவகாரம்: ராமதாஸ் திடீர் பல்டி ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக போலீஸாரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாகவும், மாநிலம் முழுவதிலும் "பாபா" படம் சுமாராகஓடுவதாக வந்த தகவல்களாலும் அந்தப் படத்திற்கு எதிரான தனது கட்சியினரின் போராட்டத்தை பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் நிறுத்திக் கொண்டுள்ளார்.

பூம்புகாரில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து டாக்டர் ராமதாஸ் பேசிய பேச்சுக்கள் தமிழகத்தையே கடந் சில நாட்களாகஉலுக்கி எடுத்து விட்டன. குறிப்பாக வட மாவட்டங்களில் நடிகர் ரஜினிக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள்நடந்தன.

ரஜினியின் கொடும்பாவியை பாமகவினர் எரித்தனர். பாபா படம் போட்ட தியேட்டர்களுக்கு சென்று படங்களைத்திரையிட விடாமல் கலாட்டா செய்தனர்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தியேட்டரைத் தாக்கி "பாபா" படப்பெட்டியை சிலர் கடத்திச் சென்றனர்.உச்சகட்டமாக விருத்தாசலத்தில் அப்படத்தைத் திரையிட்ட தியேட்டர் உரிமையாளரும் கடத்தப்பட்டு பின்னர்விடுவிக்கப்பட்டார். இதனால் பல பகுதிகளில் "பாபா" படம் திரையிடப்படவில்லை.

"பாபா"வுக்கு எழுந்த எதிர்ப்பு வன்முறையாக மாறுவதைக் கண்ட தமிழக அரசு, "பாபா" ஓடும் தியேட்டர்களில்பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தது. அதேபோல, ரஜினிக்கு எதிராக பாமகவினர் நடத்தியபோராட்டங்களையும் போலீஸார் தலையிட்டுத் தடுத்தனர். அதேபோல, போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினிரசிகர்களும் சரமாரியாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் "பாபா" படத்திற்கு எதிரான போராட்டம் முற்றுப் பெற்று விட்டது. அதை விட முக்கியமானவேலைகள் நிறைய இருப்பதால், "பாபா"வைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை என்று ராமதாஸ் கடலூரில் நேற்றுநடந்த சமூக நீதிப் பேரவை மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

ராமதாஸின் இந்தத் திடீர் மாற்றம் பாமகவினர் மத்தியிலும் வியப்பையும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் நிம்மதியையும்ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திடீரென்று ராமதாஸ் இந்த முடிவுக்கு வந்தது ஏன் என்ற கேள்விக்கு பல பதில்கள்கிடைத்துள்ளன.

ராமதாஸ் மீது வழக்குப் போடப் போவதாக நடிகர் ரஜினி காந்த் கடந்த சனிக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார்.இதை சந்திக்கத் தயார் என்று பாமக தலைவர் ஜி.கே. மணியும் உடனடியாக பதில் அளித்தார்.

இருப்பினும், சாதாரண ஒரு பிரச்சினைக்காக வழக்கை எல்லாம் சந்தித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுபாமக தரப்பில் சில தலைவர்கள் ராமதாஸின் காதுகளுக்குக் கொண்டு சென்றனர்.

அதேசமயம், "பாபா" படம் வெளியிட்ட தியேட்டர்களுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்திருந்ததாலும்,போராட்டம் நடத்தும் பாமகவினரை போலீஸார் பாரபட்சம் பார்க்காமல் கைது செய்து வந்ததாலும், இந்தப்போராட்டத்தால் தேவையில்லாமல் தொண்டர்கள் அவதிப்படுவதாக பாமக தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மேலும் பல பகுதிகளில் பாமகவினரின் கிளைகளும் கலைக்கப்பட்டு ரஜினி மன்றத்தில் சேரத் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதுவும் ராமதாஸை யோசிக்க வைத்தது.

இதை விட முக்கியமாக, "பாபா" படம் தமிழகம் முழுவதும் சுமாராகவே ஓடுவதாக வந்த செய்திதான் ராமதாஸைசந்தோஷப்படுத்தும் விதமாக இருந்ததாம். வட மாவட்டங்களில் மட்டுமே அதிலும் ஓரிரண்டு மாவட்டங்களில்மட்டுமே "பாபா"வுக்கு தடை விதிக்க முடிந்த ராமதாஸுக்கு, தமிழகம் முழுவதுமே படம் சுமாராக ஓடுவதாக வந்தசெய்தி சந்தோஷத்தை அளித்ததாம்.

குறிப்பாக பெண்கள் கூட்டம் "பாபா" படத்திற்குக் குறைவாக இருப்பதாக அறிந்தபோது அவர் அளவற்ற மகிழ்ச்சிஅடைந்தாராம்.

எனவே இதற்கு மேலும் நாம் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்று அவர் "பாபா"வுக்கு எதிரானபோராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் என்று பாமக தரப்பில் பேசப்படுகிறது.

எப்படியோ "பாபா"வை வைத்து உருவாகவிருந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுபொதுமக்களுக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X