For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரிக்காக பதவியை உதறியவர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த 1992ம் ஆண்டு நரசிம்மராவ் அமைச்சரவையில் இருந்த போது காவிரிப் பிரச்சனையில் மத்திய அரசின்போக்கைக் கண்டித்து மத்திய அமைச்சர் பதவியை உதறித் தள்ளியவர் வாழப்பாடி ராமமூர்த்தி.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக அரசியல் செய்தவர் வாழப்பாடி. தனது சூடான அறிக்கைகள் மூலமும்சிறந்த நிர்வாகத் திறன் மூலம் காங்கிரசுக்கு தமிழகத்தில் மறு உயிர் கொடுத்தார்.

பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்ட வாழப்பாடியார், அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் சிறந்ததொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும் காலத்திலேயேஅவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருந்தது. பெரியார் அவரைக் கவர்ந்த தலைவராக விளங்கினார்.சென்னையில் சட்டப் படிப்பு படித்து முடிக்கும் வரை மாணவர் அணியில் சேர்ந்து கொண்டு செயல்பட்டார்.

சட்டப் படிப்பை முடித்தவுடன் 1959ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இணைந்தார். ஆனால் அவருக்குரிய இடம்அது இல்லை என்பதை பின்னரே உணர்ந்தார். இதையடுத்து அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அடுத்தஆண்டு இணைந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான்.

எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் 1968ம் ஆண்டு சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பொறுப்புகிடைத்தது. அதில் திறம்பட செயலாற்றிய வாழப்பாடியார், தொழிற்சங்கவாதியாக மாறினார்.

தொடர்ந்து 1972ல் சேலம் மாவட்ட ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரானார். பிறகு மாநிலத் தலைவர் பதவிஅவரைத் தேடி வந்தது.

காங்கிரஸின் மற்றொரு தலைவரான மூப்பனாருக்கும் அவருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

இந்த நிலையில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில்அமர்த்தப்பட்டார் வாழப்பாடியார்.

அப்போதுதான் காங்கிரஸ் கட்சி அதிரடியான தலைவரைக் கண்டது. அதிருப்தியாளர்களை அதிரடியாககையாண்டார் வாழப்பாடியார். இருப்பினும் அந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி கண்டதால்வாழப்பாடியாரின் பதவி பறிபோனது.

ராஜீவ் காலத்திற்குப் பிறகு நரசிம்மராவ் காலத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக இருந்தார்வாழப்பாடியார். ஆனால் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து பதவியை உதறித்தள்ளினார்.

பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி அர்ஜூன் சிங் ஆரம்பித்த கட்சியில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகிதமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

பின்னர் பா.ஜ.க. மற்றும் திமுகவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்குடெல்லியில் அடையாளம் பெற்றுத் தந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகஇருந்தார்.

பின்னர் பாமகவின் தீவிர எதிரியாக மாறினார். திமுகவுடனும் அவருக்கிருந்த உறவு முறிந்தது. சிறிது காலம்அமைதியாக இருந்த அவர் சில மாதங்களுககு முன் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.

ஆனால் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் அப்செட் ஆகியிருந்த வாழப்பாடியார் அதிமுகவில் சேருவார்என்று வதந்தி கிளம்பியது. ஆனால் அவர் தொடர்ந்து காங்கிரஸிலேயே இருந்தார்.

சிறந்த நிர்வாகி, தொழிற்சங்கவாதி, மனிதாபிமான மனதுடையவர் என்ற பெயரைப் பெற்ற வாழப்பாடியார்,ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தவர்.

மொத்தம் 6 முறை எம்.பியாக இருந்துள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் 4 முறையும், சேலம் மற்றும் தர்மபுரிதொகுதிகளில் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2 முறை மத்திய அமைச்சராக இருந்தவர்.

வாழப்பாடி ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X