For Daily Alerts
Just In
நிரம்பி வழியும் சென்னை ஏரிகள்
சென்னை:
புயல் சின்னம் காரணமாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாநகருக்கு குடி நீர் வழங்கும்ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
பூண்டி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள 43 ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டன.
கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஏரிகள் சிறிது சிறிதாக நிரம்பி, தற்போது கடல் போல்காட்சியளிக்கின்றன.
இதனால் அடுத்த ஏழு மாதங்களுக்குச் சென்னை மாநகர மக்களுக்கு குடி நீர் பிரச்சனையே கிடையாது என்றுஉள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.
எனவே அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னைவாசிகள் குடி நீர் பிரச்சனையால் தத்தளிக்கவேண்டியிருக்காது என்று கருதப்படுகிறது.
-->


