தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு சந்திரிகா வருத்தம்
கொழும்பு:
கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா இன்று வருத்தம் தெரிவித்தார்.
அதிபராகப் பதவி ஏற்று ஏழு ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு சந்திரிகாஉரையாற்றுகையில்,
கடந்த 1983ம் ஆண்டில் இனப் பிரச்சனை தோன்றியதிலிருந்து அதை அடக்குவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது என்பது உண்மை தான்.
உண்மையிலேயே இலங்கை தமிழர்களுக்கு ஏராளமான இன்னல்கள் கொடுக்கப்பட்டன என்பதை நன்றாகஉணர்ந்துள்ளேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களைக் காப்பதற்கு அரசு தவறி விட்டது என்பதற்காக நான் என்னுடைய ஆழ்ந்தவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருக்கத்துடன் கூறினார் சந்திரிகா.
மேலும் சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கப் போவதாகவும் சந்திரிகா அறிவித்தார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குஇடையூறு அளிக்கும் விதமாக சந்திரிகா அவ்வப்போது பேசி வந்தார்.
ஆனால் பல தடைகளையும் மீறி பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்து சந்திரிகா இன்று பேசியுள்ளதுபேச்சுவார்த்தையின் போக்கை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றே தெரிகிறது.


