For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராம் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த பத்து ஆண்டுகளாக போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்த தமிழர் விடுதலைப் படை தலைவன்ராஜாராம் சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கை தேர்ந்தவர் ராஜாராம். மதுரை, சிதம்பரம், சுருளி மலை, கோட்டையூர், மேலூர்,ராஜபாளையம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவருக்கு நேரடித் தொடர்புஉண்டு.

இதுதவிர 8 கொலை வழக்குகளிலும் ராஜாராம் தேடப்பட்டு வந்தார். சென்னை பெசன்ட் நகரில் சில மாதங்களுக்கு முன் ஸ்டேட்பாங்க் கிளையில் நடந்த கொள்ளையை திட்டமிட்டு நடத்தியது இவர் தான். அதில் வங்கி அதிகாரி ஒருவர் பரிதாபமாகக்கொல்லப்பட்டார். 1980ம் ஆண்டு திருச்சி பொன்பரப்பியில் ஒரு வங்கியில் இக் கும்பல் கொள்ளை அடித்துள்ளது. மேலும் பலவங்கிக் கொள்ளைகளில் இவருக்குத் தொடர்புண்டு.

நேற்று வழக்கமான ரோந்தில் ஈடுபட்டிருந்த சென்னை வட பழனி போலீசாரிடம் இவர் எதிர்பாராமல் சிக்கினார். நெற்குன்றம்சந்திப்பில் நின்றிருந்த இவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் பிடித்து விசாரித்தபோது தான் இவர் ராஜாராம் என்றுதெரியவந்தது.

Rajaramஅதிர்ச்சியடைந்த போலீசார் உடனே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர். இவரிடம் இருந்த பையில் ஏராளமானவெடிபொருள், டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை அதில் இருந்தன.

17க்கும் மேற்பட்ட வெடிகுண்டு வழக்குகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட ராஜாராமை ,சைதாப்பேட்டை 17-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில்அடைத்தனர்.

இன்று ராஜாராம் சென்னை எழும்பூர் 17-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் விசாரணைநடத்த வேண்டியிருப்பதால் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதி கோரி போலீஸார் விண்ணப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜாராமை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ராஜாராமை போலீஸார் தங்களது காவலில் அழைத்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும், மதுரை, ராஜபாளையம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும்திட்டமிடப்பட்டுள்ளது.

குவாகம் ராமசாமி என்பவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழர் விடுதலைப் படைக்கு பின்னர் தமிழரசன்தலைவரானார். ஆனால், ஒரு வங்கிக் கொள்ளையின்போது தமிழரசன் பொது மக்களிடம் சிக்கினார். அவரை மக்களே அடித்துக்கொன்றனர். இதையடுத்து அந்த இயக்கத்தை ராஜாராம் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.

தேசிய அளவில் பல்வேறு பிரிவினைவாத, ஆயுதப் போராட்டக் குழுக்களுடன் இந்த தமிழர் விடுதலைப் படைக்கு தொடர்புஉண்டு.

மற்றொகு தீவிரவாதி கைது:

இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம் கெளரிப்பட்டி என்ற இடத்தில் சபியுல்லா என்ற இஸ்லாமிய பாதுகாப்புப் படை தீவிரவாதிகைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அரபிக் கல்லூரி முதல்வர் அமீதுடன் இணைந்து பல்வேறு கோவில்களைத் தாக்கஇவன் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

கெளரிப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து சபியுல்லா கைது செய்யப்பட்டார்.

இந்த இஸ்லாமிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். மேலும் 5 பேர் இன்னும்தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.

இஸ்லாமிய அமைப்பின் நல்ல முயற்சி:

இதற்கிடையே வாலிபர்களிடையே தீவிரவாத எண்ணங்கள் வளர்வதைத் தடுக்க ஜமாத்தே- ஏ-இஸ்லாமி- ஹிந்த் என்ற அமைப்புதீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இது குறித்து இந்த அமைப்பின் தேசியத் தலைவர் மெளலான சிராஜூல் ஹசன் கோவையில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,பெரும்பாலான இளைஞர்கள் நல்ல எண்ணங்களுடன் தான் உள்ளனர். ஆனால், ஒரு சில தீவிரவாத அமைப்புகளின்தூண்டுதலால் சில இளைஞர்கள் மட்டும் தவறான பாதையில் வழி நடத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஒரு சிலரால் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே கெட்ட பெயர் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் தீவிரவாதத்தால் எதையும்சாதிக்க முடியாது என்பதை அந்த சில இளைஞர்கள் உணர வேண்டும். அவர்களுக்கு இதை உணர வைக்கும் முயற்சிகளில் எங்கள்அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றார்.

முன்னதாக அனைத்து மதத் தலைவர்களுடன் சிராஜூல் ஹசன் ஆலோசனையும் நடத்தினார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X