For Daily Alerts
Just In
வைகோ விடுதலைக்கு கையெழுத்து இயக்கம்: ரஜினியிடமும் கையெழுத்து வாங்க மதிமுக முடிவு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்யக் கோரி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தின் ஒருபகுதியாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரிடமும் கையெழுத்து வாங்க அக்கட்சி முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வைகோவை விடுதலை செய்யக் கோரி நாடு முழுவதிலும் 1 கோடி பேரிடம் கையெழுத்த வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி முதல் நபராக கையெழுத்துப் போட்டு இதைத் தொடங்கிவைத்துள்ளார்.
தமிழகத்தில் ஏராளமான பேர் ஆர்வத்துடன் கையெழுத்துப் போட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக நடிகர்கள்ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோரிடமும் கையெழுத்துப் பெறவுள்ளோம் என்றார்.
-->


