For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க படைகளை தீவிரமாய் திருப்பி தாக்குகிறது ஈராக்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாக்:

முன்னேறி வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளைத் திருப்பித் தாக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக இந்தப் படைகள் ஈராக்கின் தென் பகுதியில் மிக வேகமாக முன்னேறி வந்தன. கிட்டத்தட்ட160 கி.மீ. தூரம் ஈராக்குக்குள் நுழைந்துள்ளன. ஆனால், இப்போது ஈராக்கும் திருப்பித் தாக்க ஆரம்பித்துள்ளது.ஈராக்கிய தாக்குதலில் பல இடங்களில் அமெரிக்க டாங்கிகளும் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

சில அமெரிக்கப் படையினரையும் ஈராக் சிறை பிடித்துள்ளது.

பாஸ்ரா, உம் கஸ்ஸர் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும்இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.

உள்ளே நுழைந்த பிரிட்டிஷ் எக்ஸ்பிடிசியரி படைகளையும் அமெரிக்காவின் 7வது கேவல்ரி படைகளையும்ஈராக்கின் 47வது இன்பான்ட்ரி படையின் 3ம் ரெஜிமெண்ட் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

இதில் ஈராக் படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அமெரிக்க- பிரிட்டன்படைகளுக்குத் தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈராக் கூறுகிறது.

இதனால் போ, பாஸ்ரா, நசிரியா, ருமிலியா, சாமவானா ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளின்முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய ராணுவம் கூறியுள்ளது.

மேலும் சிரியா எல்லையில் விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் ஈராக்கில் நுழைய முயன்ற அமெரிக்கப்படைகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டுள்ளது. அல்-கொய்ம் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கமுயன்றன.

ஆனால், ஈராக்கிய விமான எதிர்ப்பு பீரங்கிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்ததால் தங்களது பாராசூட்முயற்சிகளை அமெரிக்கப் படைகள் நிறுத்திக் கொண்டன.

மேலும் அமெரிக்கா ஏவிய 21 டாமஹாக் ஏவுகணைகளையும் தனது விமான எதிர்ப்பு ஏவுகணகளால் தாக்கிஅழித்துள்ளதாகவும் ஈராக் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 500 டாமஹாக் ஏவுகணைகளை அமெரிக்காஈராக் மீது ஏவியது. நேற்றிரவும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

பாக்தாத் தவிர சதாமின் சொந்த ஊரான கிர்கித் நகரும் பலத்த குண்டுவீச்சு மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குஉள்ளாகி வருகிறது. இங்கு நடந்த தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.

நஜாப் பகுதியில் சதாமின் பாத் கட்சியின் தலைமை அலுவலகம் மீதும் பெரும் தாக்குதல் நடந்தது. இதில் பாத்கட்சியின் முக்கியத் தலைவரான நயிப் சதாக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே சில ஈராக்கியத் தலைவர்கள் தங்களுக்கு உதவவும் அணி மாறவும் முன் வந்துள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா கிளார்க் கூறுகையில், விரைவில் சதாம் ஹூசேனுக்கு எதிராக அந்நாட்டு ராணுவமே தாக்குதலில் இறங்கும். இது தொடர்பாக எங்களுடன் மூத்த ராணுவத் தளபதிகள் பேச்சு நடத்திவருகின்றனர் என்றார்.

அதே நேரத்தில் சதாம் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என பென்டகன் கூறியுள்ளது.

இந் நிலையில் தனது மூத்த அமைச்சர்கள், மகன்கள், ராணுவத் தளபதிகளுடன் நேற்று முன் தினத்தில் இருந்து 3முறை ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஈராக்கிய தொலைக்காட்சி கூறியுள்ளது. இந்தஆலோசனைக் கூட்டங்களையும் அந்த டிவி காட்டியது.

ராணுவ உடையில் இருக்கும் சதாம் பதற்றம் ஏதும் இல்லாமல் தனது அமைச்சர்களுடன் சிரித்துக் கொண்டு பேசும்காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை சதாம் தான் ஒருங்கிணைத்துவருவதாகவும் ஈராக்கிய டிவி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே நாட்டின் தென் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பு சதாமுக்கு நெருக்கமான ராணுவக் கமாண்டரானஅலி ஹசன் அல் மஜிதிடம் தரப்பட்டுள்ளது. இவர் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்துவதில் கைதேர்ந்தவர்.இதனால் இவருக்கு கெமிக்கல் அலி என்று கூட பெயர் உண்டு.

இந் நிலையில் போரை உடனே தடுத்து நிறுத்துமாறு ஈராக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சாப்ரி ஐ.நா.சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குமாறும் அவர்அரபு நாடுகளக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே பாக்தாதுக்கு 150 கி.மீ. தொலைவில் தான் தங்களது படைகள் இருப்பதாக அமெரிக்காகூறியுள்ளது. கடந்த 40 மணி நேரத்தில் தனது படைகள் 345 கி.மீ. தூரம் வரை ஈராக்குக்குள்முன்னேறிவிட்டதாகவும் கூறியுள்ளது. தங்களது தாக்குதலில் 100 ஈராக்கிய வீரர்கள் பலியாகியிருப்பதாகவும்அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் தெரிவித்துள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X