கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பலத்தபாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களிலும், பயணிகளிடமும் தீவிரசோதனை நடத்தப்படுகிறது.
கேரளாவிலிருந்து 23ம் தேதி (இன்று) வரும் ரயில் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககேரள போலீஸாருக்குக் கடிதம் வந்தது. அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யாவிட்டால்மும்பையில் வெடித்தது போல கோயம்புத்தூரிலும் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்றுமிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கோயம்புத்தூர் போலீஸாரை கேரள போலீஸார் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்துகோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் கேரள ரயில்களில் பலத்த சோதனை நடத்தப்படுகிறது.அதேபோல ரயில் நிலையத்திற்குள் நடமாடும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.


