For Daily Alerts
Just In
சென்னையில் 68 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
சென்னை:
குடிநீர் மற்றும் கழிவு நீர் கட்டணம் செலுத்தாத 68 பேருடைய குடி நீர் இணைப்புகளை சென்னைபெருநகர குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) துண்டித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ வாட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றுக் கட்டணங்களைச் செலுத்தாத 68 வாடிக்கையாளர்களுடையஇணைப்புகள் துண்டிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கட்டணத்தைச் செலுத்தாத மற்றவர்கள் உடனடியாக உரிய கட்டணத்தைச் செலுத்தவேண்டும். தவறினால் அவர்களுடைய குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


