இன்று பேச்சுவார்த்தை: சமையல் கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வருமா?
நிாமக்கல்:
சமையல் கேஸ் டேங்கர் லாரி டிரைவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தென்மண்டல சமையல் கேஸ் விற்பனையாளர்களுக்கும் லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையேஇன்று நாமக்கல்லில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தங்களுக்கு மாத ஊதியம் தர வேண்டும், பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் வேலை நிறுத்தம்மேற்கொண்டுள்ளனர்.
இதனால் தென் மாநிலங்களில் சயைமல் கேஸ் தொழிற்சாலைகளில் கேஸ் நிரப்புவது, சிலிண்டர்களைவினியோகிப்பது போன்ற பணிகள் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்களும் சிலிண்டர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டிரைவர்களுக்கு எல்.பி.ஜி. நிறுவன உரிமையாளர்கள் தான் ஊதியம் தர வேண்டும் என லாரிஉரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், லாரி வாடகை மட்டுமே தருவோம் அதிலேயே ஊதியத்தையும் லாரி உரிமையாளர்கள்தந்து கொள்ள வேண்டும் என எல்.பி.ஜி. நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் தான் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தைநடைபெறுகிறது.
நாமக்கல்லில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு லாரி உரிமையாளர்கள சங்கத் தலைவர்செங்கோடன், தென் மண்டல எல்.பி.ஜி. நிறுவன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்னம்பலம்தலைமை வகிக்கின்றனர். இதில் லாரி டிரைவர்கள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.


