அமெரிக்கா: கட்டடத்தின் மீது விமானம் மோதி 2 பேர் பலி
லாஸ் ஏஞ்ஜெல்ஸ்:
ஹாலிவுட் அருகே யூதர்கள் அதிகம் வசிக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் மீது சிறியவிமானம் மோதியது.
இது தீவிரவாதிகள் தாக்குதலா அல்லது விபத்தா என்று தெரியவில்லை.
பீச் போனான்ஸா என்ற ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் மாகாணத்தின்பேர்பேக்ஸ் மாவட்டத்தில் உள்ள ஷரோன் அபார்ட்மெண்ட் ஸ் என்ற குடியிருப்புப் பகுதியின் மீதுவந்து மோதியது.
லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நேரப்படி பிற்பகல் 3.55 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.25மணி) இச் சம்பவம் நடந்தது.
விமானம் வானில் இருந்து செங்குத்தாக வந்து ஒரு குடியிருப்பின் மீது விழுந்தாக நேரில்பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அந்தக் கட்டடத்தில் தீப் பிடித்துக் கொண்டது. பின்னர் இடிந்து விழுந்தது. அப்போதுதரைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இருந்த கோஸலினும் வெவடித்துச் சிதறியது.இதனால் கட்டடம் சுக்குநூறானது.
அப்போது 2வது 3வது மாடிகளில் இருந்து பலர் உயிர் தப்ப தரையில் குதித்துள்ளனர். இதிலும் பலர்காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இதில் 2வது மாடியில் இருந்த நபரும் விமானத்தை ஓட்டி வந்த பைலட்டும் பலியாகியுள்ளதாகதீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களில்ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இடிபாடுகளில் மேலும் பலர் இறந்து கிடக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
லாஸ் ஏஞ்ஜெல்சில் உள்ள சாண்டா மோனிகா விமான தளத்திலி இருந்து இந்த விமானம்கிளம்பியுள்ளது. இடாஹோவில் உள்ள சன் வேலிக்கு அந்த விமானம் கிளம்பியது.
7 நிமிடங்களுக்குப் பின் அந்த விமானத்துடனான ரேடியோ தொடர்பு இன்னொரு விமான தளத்துக்குமாற்றப்பட்டது. ஆனால், அந்த விமான தளத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் விமானிபேசவே இல்லை.
கிட்டதட்ட 3 நிமிட மெளனத்துக்குப் பின் இந்த விமானம் யூதர்களின் குடியிருப்பின் மீதுமோதியுள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதையும் விமானியின் பெயர் விவரத்தையும்உடனடியாக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதுவரை இதை விபத்தாகவே பார்ப்பதாகவும் ஆனால், தீவிரவாத தாக்குதலாகவும் இருக்கலாம்என்றும் எப்.பி.ஐ. கூறியுள்ளது.
லண்டன் விமான நிலையத்தில்...
இதற்கிடையே லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஊடுருவிய ஒரு நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்தீவிரவாதியா அல்லது கிரிமனல் பேர்வழியா என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
விமான நிலையத்துக்குள் மிக வேகமாக வந்த அந்தக் காரை போலீசார் நிறுத்தியபோது அதில் இருந்த நபர் துப்பாக்கியால்போலீசாரை சுட முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


