For Daily Alerts
Just In
மெரீனாவில் தோன்றிய திடீர் கோவில்கள், தர்ஹா இடிப்பு
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் கட்டப்பட்டிருந்த சிறு கோவில்கள், இஸ்லாமிய தர்ஹாவை ஆகியவற்றைபோலீஸான் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
மெரீனா கடற்கரைப் பகுதியில் ஆக்கிரமிப்புக் குடிசைகள் உள்ளன. இவை தவிர ஆங்காங்கே திடீர் கோவில்கள்,இஸ்லாமிய தர்ஹாக்கள் ஆகியவையும் தோன்றி வருகின்றன. இவற்றை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. கோவில் சிலைகள், தர்ஹாவில் இருந்த கொடிகள்ஆகியவை மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


